Thursday, April 03, 2014
தென்காசி::லோக்சபா தேர்தலில், தே.ஜ., கூட்டணிக்கு வலுசேர்க்கும்
காண்டீபமாக விஜயகாந்த் உள்ளார்,என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ
தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம் கலிங்கப்பட்டியில் தனது வீட்டிற்கு
வந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை வரவேற்று, வைகோ பேசியதாவது: எனது
பாட்டனார் கட்டிய இந்த வீட்டிற்கு, 1930ல், சென்னை ராஜதானி பிரதமர் ஆக
இருந்த முனுசாமி நாயுடு, 1954ல் முதல்வர் காமராஜர், பசும்பொன் முத்து
ராமலிங்கத்தேவர் உள்ளிட்டோர் வந்தனர். காங்.,கிற்கு ஆதரவாக பணி
செய்யக்கூடாது என அன்று தேவர் கூறினார். அதன்படி இன்றும் நான் நடக்கிறேன்.
1967ல், அண்ணாதுரை முதல்வராக இருந்தபோது, வர திட்டமிட்டிருந்தார். ஆனால்,
சென்னையில் குடிசை தீ விபத்தால் வரமுடியவில்லை. 1973ல் முதல்வராக இருந்த
தி.மு.க., தலைவர் கருணாநிதி வந்து உணவருந்தினார். நாவலர் நெடுஞ்செழியன்,
தி.மு.க., பொதுச்செயலர் பேராசிரியர் அன்பழகன், அன்பில் தர்மலிங்கம்,
அமைச்சர் மாதவன், சி.பா., ஆதித்தனார், சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி
ரத்னவேல் பாண்டியன், ஜி.கே.,மூப்பனார், பி.எஸ்.,குமாரசாமி ராஜா, ஓமந்தூர்
ராமசாமி ரெட்டியார் உள்ளிட்டோர் வந்த சிறப்பு மிக்க இந்த வீட்டிற்கு, இன்று
விஜயகாந்த் வந்துள்ளார்.
இலங்கை போரில் காயமடைந்த புலிகள் 37 பேருக்கு ஓராண்டு இங்கு வைத்துதான் சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால், எங்கள் வீட்டில் அவர்கள் இருப்பதாக போலீசுக்கு யாரும், மொட்டை கடிதம் எழுதியது கிடையாது. இது சமத்துவம், ஒற்றுமை வாய்ந்த ஊர். 2006ல், இந்த வீட்டிற்கு வந்த முதல்வர் ஜெ., எனது தாயை சந்தித்தார். அப்போது, தனது தாயை சந்தித்ததுபோல உள்ளதாக கூறினார். கேப்டன் பிரபாகரன் படத்தில் நடித்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திற்கு, உலக தமிழர்கள் மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு உள்ளது. யாராவது அவரை எவ்வளவு இழிவுபடுத்தினாலும், பதில் கூறாமல், சகிப்புத்தன்மையுடன் இருப்பார். அவரால், முகவரி கிடைத்து எம்.எல்.ஏ., ஆனவர்கள், அவரது முதுகில் குத்தியபோதும், அவர் எதுவும் பேசவில்லை. லோக்சபா தேர்தலில், தே.ஜ., கூட்டணிக்கு வலுசேர்க்கும் காண்டீபமாக விஜயகாந்த் உள்ளார். மார்ச் 14ல், அவர் தேர்தல் பிரசாரத்தை துவக்கி கூட்டணிக்கு பலம் சேர்த்தார். கைவிரல் நீட்டி குற்றம் கூற முடியாத படி, எம்.எல்.ஏ., பணி செய்த, எங்கள் கட்சி தென்காசி வேட்பாளர் சதன் திருமலைக்குமாரை, அமோக வெற்றி பெறச் செய்யுங்கள், என்றார்.
வைகோ வீட்டிற்கு வந்தார் விஜயகாந்த்: தோசை, வடையை ருசித்து சாப்பிட்டார்: வவுனியாவில் பிரபாகரனுடன், தான் இருந்த படத்தை விஜயகாந்திடம் வைகோ காட்டினார்!
தென்காசி: கலிங்கப்பட்டியில் உள்ள ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ வீட்டிற்குநேற்றுமாலை வந்த, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், வைகோ தாயார் மாரியம்மாள் காலைத்தொட்டு வணங்கினார். தோசை, வடையை ருசித்து சாப்பிட்டார். விருதுநகர் தொகுதியில் வைகோவை ஆதரித்து பிரசாரம் செய்ய வந்த விஜயகாந்த், நெல்லைமாவட்டம் கலிங்கப்பட்டியில் உள்ள வைகோ வீட்டிற்கு நேற்று மாலை, 4.05 மணிக்கு வந்தார். அவரை வீட்டு வாசலில் வைகோவின் தம்பி ரவிச்சந்திரன், மாலையணிவித்து வரவேற்றார்.
விஜயகாந்த் கையை பிடித்து வீட்டிற்குள் வைகோ அழைத்துச் சென்றார். அங்கு தாயார் மாரியம்மாள், மனைவி ரேணுகாதேவி, மகன் துரை வையாபுரி, குடும்பத்தினர், தென்காசி ம.தி.மு.க., வேட்பாளர் சதன் திருமலைக்குமார், உள்ளிட்டோரை அறிமுகப்படுத்தினார். பின்னர், இருவரும், ஒருவருக்கு ஒருவர் மாலை, சால்வை அணிவித்துக் கொண்டனர். வைகோ தாயாரின் காலைத்தொட்டு வணங்கிய விஜயகாந்த், நலம் விசாரித்தார். இலங்கை, வவுனியாவில் பிரபாகரனுடன், தான் இருந்த படத்தை விஜயகாந்திடம் வைகோ காட்டினார். இருவரும், தனியறையில் சிறிது நேரம் பேசினர். அதனைத்தொடர்ந்து, விஜயகாந்திற்கு தோசை, வடை, இருவகை சட்னி, அல்வா, முந்திரிபருப்பு பரிமாறப்பட்டது. அவர் ருசித்து சாப்பிட்டார்.
பின்னர், வீட்டு வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் இருவரும் சதன்திருமலைக்குமாரை ஆதரித்து பேசினர். ஒரு மணிநேரத்திற்கும் மேலாக விஜயகாந்த் அங்கிருந்தார். பின்னர், வைகோவுடன், விருதுநகர் பிரசாரத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.

No comments:
Post a Comment