Thursday, April 24, 2014

புலிகள் மீள ஒருங்கிணைவது தொடர்பிலான ஆதாரங்கள் உண்டு: வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்!

Thursday, April 24, 2014
இலங்கை::
புலிகள் மீள ஒருங்கிணைவது தொடர்பிலான ஆதாரங்கள் உண்டு என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் பயங்கரவாதத்தை தூண்டும் நோக்கில் பாரியளவில் நிதி அனுப்பி வைக்கப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான ஆதாரங்கள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக பணம் அனுப்பி வைக்கப்படுகின்றமை மற்றும் வங்கிக் கணக்கு விபரங்கள் இவ்வாறு கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நிலைகொண்டுள்ள ராஜதந்திரிகளுக்கு பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கும் நோக்கில் நடைபெற்ற சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையின் 1373 சரத்தின் பிரகாரம் 16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்களையும், 424 தனிப்பட்ட நபர்களையும் தடை செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத நிதிக் கொடுக்கல் வாங்கல்களுக்கு இடமளிக்கக் கூடாது என்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவ, புலனாய்வு மற்றும் பிரச்சார நோக்கங்களுக்காக இவ்வாறு நிதி அனுப்பி வைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் பற்றி விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதம் காரணமாக இந்த நாடு சில தசாப்தங்களாகவே பாரியளவில் நெருக்கடிகளை எதிர்நோக்கி வந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment