Wednesday, April 16, 2014

இலங்கை தமிழர்களுக்கு காங்கிரஸ் அரசு தொடர்ந்து நன்மை செய்யும்: தமிழர்களுக்காக ரத்தம் சிந்தியவர் ராஜீவ்: கன்னியாகுமரி கூட்டத்தில் சோனியா!

Wednesday, April 16, 2014
கன்னியா குமரி::காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி  கன்னியா குமரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரசாரம் பொது கூட்ட மேடையில் நின்று தொண்டர்களுக்கு கையசைக்கும் காட்சி..
 
மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியைத் தவிர வேறு எந்த கட்சி இலங்கை தமிழர்களுக்கு அதிக நன்மைகளை செய்துள்ளது? என்று கன்னியாகுமரியில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக அரசியல் கட்சிகள் இலங்கை பிரச்சினையில் காங்கிரஸ் கட்சி எதுவும் செய்யவில்லை என சொல்கிறார்கள். அவர்களுக்கு நான் சவால் விட்டு கேட்கிறேன். காங்கிரஸ் கட்சியை விட இலங்கை தமிழர்களுக்கு எந்த கட்சி நன்மை செய்திருக்க முடியும்.
 
அன்புத்தலைவர் ராஜீவ் காந்தி ரத்தம் சிந்தியதை யாரும் மறக்க முடியாது. இலங்கை தமிழர்களுக்கு இந்திய அரசு நன்மை தொடர்ந்து செய்யும் என்று உறுதி அளிக்கிறேன். இலங்கை தமிழர்களுக்காக மத்திய அரசு வீதிகளைப் போட்டுக் கொடுத்துள்ளது. ரயில் தண்டவாளங்கள் அமைத்து கொடுத்துள்ளது. பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இலங்கை தமிழர்களுக்கு அரசியல் தீர்வு ஏற்பட மத்திய அரசு முன்னெடுத்து செல்கிறது. அரசியல் ஆதாயத்துக்காக இலங்கை தமிழர்களுக்காக காங்கிரஸ் செய்த சாதனைகளை மறைத்து யாரும் தவறாக பிரசாரம் செய்ய வேண்டாம்.
 
குமரி மாவட்டத்தில் மீனவர்களுக்கு பிரச்சினைகள், துன்பங்கள், துயரங்கள் வந்தபோது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தொடர்ந்து பாதுகாப்பு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் தமிழக மீனவ பிரதிநிதிகளையும் இலங்கை அரசுடன் சந்தித்து பேச முயற்சி செய்த பெருமை மத்திய அரசே சாரும். இந்த பேச்சுவார்த்தைக்கு அ.தி.மு.க. அரசுதான் பெரும் கால தாமதம் செய்தது என்பதை பகிரங்கமாக சொல்லிக் கொள்கிறேன். 
 
அன்புத்தலைவர் ராஜீவ் காந்தி ரத்தம் சிந்தியதை  யாரும் மறக்க முடியாது. இலங்கை தமிழர்களுக்கு இந்திய அரசு நன்மை தொடர்ந்து செய்யும் என்று உறுதி அளிக்கிறேன். இலங்கை தமிழர்களுக்காக மத்திய அரசு சாலைகள் «£ட்டுக் கொடுத்துள்ளது. ரெயில்வே தண்டவாளங்கள் அமைத்து கொடுத்துள்ளது. ள்ளிக்கூடங்கள் திறக்கப் ட்டுள்ளது.
மேலும் இலங்கை தமிழர் களுக்கு அரசியல் தீர்வு ஏற்ட மத்திய அரசு முன்னேடுத்து செல்கிறது. அரசியல் ஆதாயத்துக்காக இலங்கை தமிழர்களுக்காக காங்கிரஸ் செய்த சாதனை களை மறைத்து யாரும் தவறாக பிரசாரம் செய்ய வேண்டாம்.
குமரி மாவட்டத்தில் மீனவர்களுக்கு பிரச் சினைகள், துன்பங்கள், துயரங்கள் வந்தபோது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தொடர்ந்து பாதுகாத்து வரு கிறது. கடந்த ஜனவரி மாதம் தமிழக மீனவ பிரதிநிதிகளை யும் இலங்கை அரசுடன் சந்தித்து பேச முயற்சி செய்த பெருமை மத்திய அரசே சாரும்.
இந்திய தேசம் மிகப்பெரிய சவாலை எதிர்நோக்கி இருக்கிறது. இந்த தேர்தல் மதவாதம், அரசியல் ஆதாயம், பணபலம் ஆகியவற்றுடன் இந்திய தத்துவத்திற்கு சவால் விடுக்கிற தேர்தலாக உள்ளது.பாரதீய ஜனதா கட்சி தேசத்தை பிரித்து ஆள நினைக்கிறது. அவ்வாறு நினைத்தால் சமூக அமைதி என்னவாகும். நாட்டில் வளர்ச்சி, முன்னேற்றம் வருமா?
பாரதீயஜனதா கட்சி இன்று ஒரு நபரிடம் மாட்டிக் கொண்டிருக்கிறது. அவர் இந்தியாவில் உள்ள எந்த பிரச்சினைக்கும் தீர்வு இருப்பதாக சொல்கிறார். அவரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அந்த மனிதரின் கைகளில்  இந்த தேசம் போய் விடக் கூடாது. நமது காங்கிரஸ் தலைவர்கள் தேச ஒற்றுமைக் காக பெரிய விலை கொடுத் துள்ளனர். இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆகியோர் இந்தியாவின் தத்துவத்தை காப்பாற்ற இன்னுயிரை நீத்தனர். எல்லா சமூகத்தினரும் வளர்ச்சி அடைய காங்கிரசை ஆதரித்து கை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு சோனியாகாந்தி பேசினார்.

No comments:

Post a Comment