Wednesday, April 16, 2014

இந்தியப் பொதுத் தேர்தலை ஒட்டி தமிழகத்தில் நடைபெறும் பிரசாரங்களில் தற்போது இலங்கை தமிழர் பிரச்சினை ஓரங்கட்டப்பட்டது: 'த ஹிண்டு'!

Wednesday, April 16, 2014
சென்னை:இந்தியப் பொதுத் தேர்தலை ஒட்டி தமிழகத்தில் நடைபெறும் பிரசாரங்களில் தற்போது இலங்கை தமிழர் பிரச்சினை அத்துணை முக்கியத்துவம் வாய்ந்த இடமளிக்கப்படாமல் பின்தள்ளப்பட்டுவிட்டதாம். 'த ஹிண்டு' நாளிதழ்  செய்தி வெளியிட்டிருக்கிறது.
 
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு முன்னணி அரச இலங்கை தமிழர்களையும் அவர்களது நலன்களையும் காப்பாற்றத் தவறிவிட்டது என்று முன்னர் வலியுறுத்திவந்த அனேகமாக ஏனைய அனைத்துப் பிரதான கட்சிகளுமே அந்தத் தொனியைக் கைவிட்டுவிட்டன என்றும் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து அவை குறிப்பிடுவதே குறைவு என்றும் அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.  இலங்கை தமிழர்களை மன்மோகன் சிங் தலைமையிலான அரசே காட்டிக் கொடுத்து வந்தது என்று கடுமையாக விமர்சித்து வந்த அ.தி.முகழகமாகட்டும், அதே பிரச்சினைக்காக காங்கிரஸ் தலைமையிலான முற்போக்கு முன்னணி அரசிலிருந்து வெளியேறிய தி.மு.கழகமாகட்டும் இரண்டுமே இலங்கை தமிழர் விடயத்தை இப்போது நமது பிரசார மேடைகளில் பெரிதாக மையப் பொருளாக எடுக்காமல் தவிர்த்து வருகின்றன.
 
கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க., பாட்டாளி மக்கள் கட்சி, தே.மு.தி.க. ஆகிய  இலங்கை தமிழர்களுக்காக முன்னர் தீவிரமாகக் குரல் கொடுத்து வந்த கட்சிகள் கூட இப்போது தேர்தல் மேடைகளில் இலங்கை தமிழர் விடயத்தை அடக்கியே வாசிக்கின்றனவாம். ஆனால் இவற்றுக்கு மாறாக, காங்கிரஸ் கட்சியும் அதன் வேட்பாளர்களும் இலங்கை தமிழர்களின் புனர்வாழ்வுக்கு காங்கிரஸ் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை தமது கூட்டங்களில் விதந்துரைத்து வருகின்றனர் என்றும் அந்தச் செய்தி மேலும் தெரிவித்தது.

No comments:

Post a Comment