Sunday, April 20, 2014

இலங்கையின் தேசிய ஒற்றுமையினை சீர்குலைக்க சில வெளிநாட்டு சக்திகள் சூழ்ச்சி –ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மட்டக்களப்பில் தெரிவிப்பு!


Sunday, April 20, 2014
இலங்கை::சில வெளிநாட்டு சக்திகள் சதிகளையும் சூட்சிகளையும் செய்து இந்த நாட்டில் தேசிய ஒற்றுமையினை சீர்குலைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுவருகின்றது. எனினும் அரசாங்கம் அபிவிருத்தியை மேற்கொண்டு நல்லிணகத்தினையும் ஏற்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.
மட்டக்களப்பு மண்முனைத்துறை பாலத்தினை திறந்துவைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

மண்முனைத்துறை பாலத்தினை திறந்துவைத்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.பல வருடமாக மிகவும் கடுமையானதும் கஸ்டமானதுமான பயணத்தினை மேற்கொண்டவர்களின் கஸ்டத்துக்கு முற்றுப்புள்ளி இன்று வைக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் பல அரசியல் கட்சிகளினால்,கட்சி தலைவர்களினால் வாக்குறுதி வழங்கப்பட்டு கல் நட்டுசென்றுள்ளனர்.ஆனால் பல்லாண்டுகால பிரச்சினைக்கு ஜெய்க்கா மூலம் எமது அரசுதான் முற்றுப்புள்ள வைத்துள்ளது.
சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல்ரீதியாக இந்த பாலம் தொடர்பில் பல்வேறு பொய்களை பரப்பிவருகின்றனர்.மறுபக்கத்தில் இருக்கும் மக்களுக்கு அநீதிகள் ஏற்படுத்தப்படும்,அவர்களுக்கு பிரச்சினை வரும் என்றெல்லாம் பிரசாரம் செய்துவருகின்றனர்.

எந்த ஒரு இனத்தினையும் ஒதுக்கிவைக்க,பிரித்துவைக்க,அநீதிக்கு உட்படுத்த நானும் எனது அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்,ஏனைய பதவி நிலைகளில் இருப்பவர்கள் ஒருபோதும் காரணமாக இருக்கமாட்டோம் என்பதை எமது அரசாங்கத்தின் சார்பில் இந்த இடத்தில் நான் உத்தரவாதம் அளிக்கிறேன்.

பல கட்டுக்கதைகளை,பொய்ப்பிரசாரங்களை கட்டவிழ்த்துவிட சில குழுக்கள் முயற்சிசெய்துவருகின்றன.ஒரு சிலர் கூறும் இவ்வாறான கதைகளால் பாரிய பிரச்சினைகள் ஏற்படலாம்.

கடந்த 30 வருடகாலத்தில் நாங்கள் பட்ட துன்பம்,நாங்கள்பட்ட கஸ்டம்,நாங்கள்பட்ட துயரங்கள் போதும்.நாங்கள் நல்லிணகத்தினை ஏற்படுத்திவாழவேண்டும்.எமது பிள்ளைகள் ஏனைய குழந்தைகளுடன் நட்பாகவும் ஒன்றாகவும் வாழவேண்டும்.நாங்கள் ஒன்றாக வாழவேண்டும் என உறுதிபூணவேண்டும்.இந்த நாட்டினை அபிவிருத்திசெய்து நல்லிணகத்தினை ஏற்படுத்தும்போதுதான் அதன் பலாபலன்களை காணமுடியும்.

சில வெளிநாட்டு சக்திகள் சதிகளையும் சூட்சிகளையும் செய்து இந்த நாட்டில் தேசிய ஒற்றுமையினை சீர்குலைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுவருகின்றது. எனினும் எமது அரசாங்கம் அபிவிருத்தியை மேற்கொண்டு நல்லிணகத்தினையும் ஏற்படுத்தி அனைத்து இன மக்களும் ஒன்றுபட்டுவாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருகின்றது.

இந்த நாட்டில் எல்லா இனமக்களும் ஒன்று சேர்ந்துவாழவேண்டும் என்பதையே விரும்புகின்றோம்.பிள்ளையான்,கருணா அம்மான்,ஹிஸ்புல்லா போன்றவர்களும் அதனையே விரும்புகின்றனர்.அதன்காரணமாகவே இவர்கள் எங்களுடன் இணைந்து ஒன்றுபட்டுசெயற்பட்டுவருகின்றனர்.
இதேபோல் எமது பிள்ளைகளும் ஒன்றுமையுடன் செயற்படுவார்கள் என்று உணர்கின்றேன்.

எங்கள் மத்தியில் உள்ள அனைத்து இன மக்களுக்கு மத்தியிலும் நல்ல இறுக்கம் உள்ளது.நான் 1970ஆம்ஆண்டு காலப்பகுதியில் இப்பகுதிக்கு வழக்காடவரும்போது எனக்கு ஏற்படும் சந்தேகங்களை இங்கிருந்த சாம் தம்பிமுத்துவிடம் சென்று அறிந்துகொள்வேன்.என்றார்.

No comments:

Post a Comment