Monday, April 28, 2014

சிவனொளிபாதமலைக்கு யாத்திரை மேற்கொண்டிருந்த நால்வர் தவறி விழுந்ததில் ஒருவர் பலி மூவர் காயம்!

Monday 28 April 2014
இலங்கை::சிவனொளிபாதமலைக்கு யாத்திரை மேற்கொண்டிருந்த நால்வர் தவறி விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
 
சம்பவத்தில் காயமடைந்த மேலும் மூவர் இன்று காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
அம்பலாந்தோட்டையிலிருந்து சிவனொளிபாதமலைக்கு யாத்திரை மேற்கொண்டிருந்த 82 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்
 
காயமடைந்த பெண் ஒருவர் டிக்கோயா கிளங்கன்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
 
ஏனைய இருவரும் மஸ்கெலியா வைத்தியசாலையிலும், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையிலும் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

No comments:

Post a Comment