Thursday, April 03, 2014
இலங்கை::கொள்ளையடிக்கப்படுவதால், இவ்வீதியைப் பயன்படுத்துகின்ற பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இலங்கை::கொள்ளையடிக்கப்படுவதால், இவ்வீதியைப் பயன்படுத்துகின்ற பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இரவு வேளைகளில் மோட்டார் சைக்கிள், துவிச்சக்கர வண்டிகளில் வருவோரை மறித்து பணம், நகைகள் திருடுவதாக பாதிக்கப்பட்ட பலர் தெரிவிக்கின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள இந்த இரு பகுதிகளிலும் காலை 6 மணிக்கு பின்பு இவ்வாறான வழிப்பறி, பயமுறுத்தல் சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுவதாகவும், இதனால் அந்த நேரத்திற்கு முன்பாகவே வேலைத்தளங்களில் இருந்து செல்ல வேண்டியிருப்பதாகவும் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
வடமராட்சி பகுதி வர்த்தக நிலையங்களில் கடமை புரிவோரே மாலை நேரங்களில் வீடு திரும்புவதாகவும், இவர்களை குறிவைத்தே ஒரு குழு முள்ளி மற்றும் யாக்கரு போன்ற பகுதிகளில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
எனவே, பொது மக்களின் நன்மை கருதி இரவு நேரங்களில் பொலிஸார் இவ்வாறான பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:
Post a Comment