இலங்கை::கடல் வழியாக இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தப்படுவதை தடுக்க விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கடற்படை ஊடகப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
புலனாய்வு துறையினருடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனினும் அதிக போதைப் பொருள் வர்த்தக கொடுக்கல் வாங்கல் சர்வதேச கடல் எல்லையில் இடம்பெறுகின்றன. அதனைத் தடுக்க முடியாது உள்ளது.
ஒவ்வொரு மீன்பிடி படகுகளையும் சோதனை செய்ய முடியாது. எனினும் இதற்கு விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று மேலும் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment