Thursday, April 03, 2014
இலங்கை::வடக்கு மாகாணத்தில் பணிபுரியும் அரச உயர் அதிகாரிகளுக்கு அண்மைக்காலமாக இனந்தெரியாதோரால் தொலைபேசி மூலம் தொடர்ந்தும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகின்றமையினால் அதிகாரிகள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

கடந்த வருடம் இடம்பெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் மாகாணத்தில் கடமையாற்றும் அரச உயர் அதிகாரிகளை இலக்கு வைத்து தொடர்ந்து பல்வேறு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் அரச உயர் அதிகாரிகள் பலரும் புதிய அல்லது தெரியாத தொலைபேசி இலக்கங்களில் இருந்து வரும் அழைப்புக்களுக்குப் பதிலளிக்க பின்னடிக்கின்றனர்.
அதேவேளையில் சில அதிகாரிகள் தங்களின் தொலைபேசி இலக்கங்களை மாற்றியுள்ளனர். வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் பிரதம கணக்காளர் ஆகியோருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. அதே போன்று வடக்கு மாகாண பிரதம செயலாளருக்கும் இனந்தெரியாதோரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது நல்லூர் பிரதேச செயலாளர் பா.செந்தில்நந்தனனுக்கும் இனந்தெரியாதோரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர் இது தொடர்பில் யாழ் பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

No comments:
Post a Comment