Thursday, April 17, 2014
ஈரோடு::தமிழகத்தில் நிலவும் மின்வெட்டுக்கு காங்கிரஸ்தான் காரணம் என்று ஈரோட்டில் இன்று காலை நடந்த கூட்டத்தில் பாஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி தமிழகத்தில் இரண்டு நாள் பிரசார பயணம் மேற்கொண்டுள்ளார். ஈரோட்டில் இன்று காலை நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்துக்கு தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், ஈரோடு தொகுதி மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி, திருப்பூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் தினேஷ்குமார், பொள்ளாச்சி தொகுதி கொ.ம.தே.க வேட்பாளர் ஈஸ்வரன் ஆகியோரை ஆதரித்து நரேந்திர மோடி பேசினார். அவர் பேசியதாவது:
இந்த தேர்தல் சிறப்பானது. வித்தியாசமானது. இத்தேர்தலில் கட்சிகள் போட்டியிடவில்லை. வேட்பாளர்கள் போட்டியிடவில்லை. மக்களாகிய நீங்கள் போட்டியிடுகிறீர்கள். இது இந்தியாவுக்கான தேர்தல். முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட ஒரு ஆற்றல் பெற்ற அரசு அமையப் போகிறது. தமிழக மக்கள் மின்சாரம் இல்லாமல் இருளில் தவிப்பதை நான் விரும்பவில்லை. குஜராத்தில் இப்படி ஒரு இருட்டு என்பது கடந்த கால விஷயமாகி விட்டது. அங்குள்ள குழந்தைகள் தமிழகம் வந்தால், மின்வெட்டு அவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். தமிழகத்திற்கு மின்சாரம் அனுப்ப தேவையான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ஒரே ஒரு பெண்தான் முட்டுகட்டை போடுபவராக இருக்கிறார். காங்கிரசை சார்ந்த அந்த பெண்மணிதான் முட்டுகட்டையாக இருக்கிறார். இது உங்கள் தவறு அல்ல. தமிழக மக்கள் தவறும் அல்ல. அவர் ராஜ்யசபா மூலம் வந்தவர். இந்த தேசத்தையே விற்று விட்டார்கள். நாட்டையே விலை பேசி விட்டனர்.
மரங்களை எல்லாம் வெட்டி விற்றார்களே அதற்காக அவர்களுக்கு கிடைத்தது நோட்டு. அந்த நோட்டில் இருந்தது காந்தி படம். நாட்டின் பசுமையை விற்றனர். சோனியா காந்தி அந்த அமைச்சரை மாற்றினார். 250 திட்டங்களுக்கு அனுமதி கிடைத்தது. பல திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. தொழிற்சாலைகள் எதுவும் புதிதாக வரவில்லை. இதனால் வேலையில்லாத திண்டாட்டம் அதிகரித்தது. இதற்கு யார் பொறுப்பு?இங்கு விளையும் மஞ்சளில் இருந்து மருந்து மற்றும் அழகு சாதன பொருட்கள் தயாரிப்பதற்கான ஆலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அப்போது முதல் ஈரோட்டின் பொருளாதார சூழ்நிலையே மாறிவிடும். இதற்கு பாஜ விசேஷ முயற்சி செய்யும். மஞ்சளில் இருந்து அழகு சாதன பொருட்கள் உற்பத்தி செய்யும் போது பெரும் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.
ஈரோடு பஞ்சு நூல் நெய்தல், வண்ணம் ஏற்றுதல் செய்யப்பட்ட பின்பு அதிலிருந்து மக்களுக்கு ஆடைகள் உருவாக்க தீவிர முயற்சி எடுப்போம். இதற்கு சரியான உள்கட்டமைப்பு உருவாக்கி சீர்படுத்துவோம்.கோவைக்கும், ஈரோடுக்கும், திருப்பூருக்கும், குஜராத்துக்கும் மிகுந்த நெருக்கம் உள்ளது. குஜராத்தில் விளையும் பருத்தி இங்கு ஆடைகளாக மாற்றப்படுகிறது. விவசாயத்துக்கு அடுத்ததாக ஜவுளித்துறையில்தான் அதிக வேலைவாய்ப்பு தரப்படுகிறது. இந்த தொழில் நசிந்து விட்டது. ஜவுளித்துறையில் சீனநாடு எப்படி வேலைவாய்ப்பை தருகிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். அதைப்போல் நமது நாட்டிலும் ஜவுளித்துறையை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லவேண்டும்.
ஜவுளி தொழிற் சாலைகளில் இருந்து வெளியாகும் கழிவுநீர் பிரச்சனையால், பல ஜவுளி நிறுவனங்கள் மூடப்படுகிறது. இதற்கு மாற்று வழி உள்ளது. இம்மாற்றுவழியை நாங்கள் மேற்கொண்டு ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் மூடாமல் இருக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்வோம். மத்திய அரசின் தவறான நடவடிக்கையால் பல தொழில் நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு செல்கின்றன. இதன் காரணமாக இளைஞர்கள் வேலை வாய்ப்பு இழக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. சிவகாசியில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன இதற்கு மத்திய அரசின் பொறுப்பற்ற நடவடிக்கைகள்தான் காரணம். மத்திய அரசின் தவறான நடவடிக்கையால் இந்தியாவில் சீனாவின் தீப்பெட்டி, பட்டாசுகள் இந்திய பொருளாதாரத்தில் இடம் பிடிக்கும். நமது நாட்டில் கைத்தறி மற்றும் கைவினை தொழில்.

No comments:
Post a Comment