Thursday, April 17, 2014
இலங்கை::இந்தியா இலங்கை இராணுவத்துக்கு சட்ட விரோதமான உதவிகள் எதனையும் வழங்கவில்லை என்று, இராணுவ பேச்சாளர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்திய இராணுவ துருப்பினர் இலங்கையில் புலிகளுக்கு எதிராக 2009ம் ஆண்டு காலப்பகுதியில் போரிட்டதாக தெரிவித்து இந்திய உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
இறுதி யுத்தத்தின் போது இந்தியா பல்வேறு உதவிகளை வழங்கியதாகவும், எனினும் அவை சட்ட விரோதமான உதவிகள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவினால் ஆயுதங்கள், பயிற்சிகள், புலனாய்வுத் தகவல்கள் போன்றன வழங்கப்பட்டதாக இராணுவ பேச்சாளர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment