Thursday, April 24, 2014

6 வது கட்ட கட்ட தேர்தல் தமிழகம்- புதுச்சேரியில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு!

Thursday, April 24, 2014
சென்னை::பாராளுமன்ற தேர்தல் இன்று 6-வது கட்டமாக தமிழ் நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள்   மற்றும் யூனியன்  பிரதேசங்களில் நடந்து வருகிறது. மொத்தம் 117 தொகுதிகளுக்கு இன்று ஓட்டுப்பதிவு நடந்து வரு கிறது.
 இன்று காலை 7 மணிக்கு தமிழ்நாட் டில் உள்ள 39 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு தொடங்கியது. வாக்களிப்பதற்காக காலை 6.45 மணி முதலே மக்கள் வாக்குச் சாவடிகளுக்கு வரத் தொடங்கி விட்டார்கள்.
 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கிய தும்  பெரும்பாலான  ஓட்டுச் சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில்நின்று ஆர்வமாக ஓட்டளித்தனர்.
 இதனால் எல்லா ஓட்டுச் சாவடிகளும் காலை 8 மணிக்கு நிரம்பி வழிந்தது.
முதல் -அமைச்சர்  ஜெயலலிதா இன்று காலை 9.10 மணிக்கு ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள ஓட்டுச்சாவடிக்கு வந்தார். அவருடன் சசிகலாவும் வந்திருந்தார். 9.15 மணி அளவில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா தனது வாக்கை பதிவு செய்தார்.
காலை 9 மணி நிலவரப் படி திருவண்ணாமலையில் அதிகபட்சமாக 17 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி இருந் தது. புதுவை, திருச்சி, தென்காசியில் தலா 16 சதவீதம், நெல்லை, நாகை, தஞ்சையில் தலா 15 சதவீதம், காஞ்சீபுரத்தில் 12 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந் தன.
சில இடங்களில் ஓட்டுப் பதிவு தொடங்கிய போது மின்னணு எந்திரங்களில் எதிர்பாராதவிதமாக பழுது ஏற்பட்டது. அந்த இடங்களில் உடனுக்குடன் எந்திரங்கள் மாற்றப்பட்டு ஓட்டுப்பதிவு தொடர்ந்து நடத்தப்பட்டது.
முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்கள் ஆர்வமுடம் மிஒக உற்சாகமாக ஓட்டளித்தனர். கடந்த 2009-ம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில்  73 சதவீதம் ஓட் டுக்கள் பதிவாகி இருந்தது. ஆனால் மக்களிடம் காணப் படும் எழுச்சி காரணமாக இந்த தடவை அதை விட கூடுதல் ஓட்டுக்கள்  பதி வாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment