Thursday, April 17, 2014
புதுடெல்லி::இந்தியா முழுவதும் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தி,
உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற 260 கோடி ரூபாயை பறிமுதல் செய்துள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை 9 கட்ட ங்களாக தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன.
இந்தியா முழுவதும் தேர்தல் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி 260 கோடி ரூபாயை
பறிமுதல் செய்துள்ளனர். உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லும் பணத்தை
அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகிறார்கள். ஆந்திர மாநிலத்தில் மட்டும் அதிக
பட்சமாக ரூ.129 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் ரூ. 39
கோடியும், தமிழ் நாட்டில் 20 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேர்தல் அதிகாரி கருத்து தெரிவிக்கை யில் தொழில் அதிபர்கள்
அதிக அளவில் போட்டியிடுகின்றனர். இதனால் பணப்புழக்கம் அதிகரிததுள்ளது
என்றார்.

No comments:
Post a Comment