Wednesday, April 16, 2014

வெலிக்கடை சிறை மகளிர் பிரிவில் பொதி ஒன்றில்ஹெரோயின்!


Wednesday, April 16, 2014
இலங்கை::வெலிக்கடை சிறை மகளிர் பிரிவிற்கு கிடைத்த பொதி ஒன்றில் இருந்து ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்
பட்டுள்ளது.

சிறைச்சாலைக்கு வெளியில் இருந்து வீசப்பட்ட பொதி ஒன்றை சோதனை செய்த போதே அதில் இருந்து ஹெரோயின் மீட்கப்பட்டதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

சவற்கார கட்டிகளில் சூட்சமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 8 ஹெரோயின் பைக்கற்றுக்கள், இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 5 சிம் கார்ட்கள் குறித்த பொதியில் இருந்துள்ளது.

இதற்கு முன்னரும் இவ்வாறு சிறைக்குள் பொதிகள் வீசப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

சிறைச்சாலைக்குள் போதைப் பொருள் பாவனை குறித்து மிகுந்த அவதானம் செலுத்தியுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment