Friday, April 4, 2014

படகு மூலம் ஆஸி.,க்கு செல்ல முயன்ற 26 இ.தமிழர்கள் கைது!

சென்னை::படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 26 இலங்கை தமிழர்கள் அந்தமான் அருகே கைது செய்யப்பட்டு சென்னையில் இருந்து அவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அந்தமான் கடல் பகுதியில் இந்திய கடலோர காவல்படையினர் ரோந்து சுற்றி வந்தனர். இரண்டு நாட்களுக்கு முன்பு அவர்கள் ரோந்துசென்ற போது ஒரு படகில் 26 மீனவர்கள் சென்று கொண்டிருப்பதை பார்த்து அவர்களை தடுத்து விசாரித்தனர். 
அவர்கள் இலங்கையை சேர்ந்த தமிழகள் என்றும்  வேலை தேடி ஆஸ்திரேலியாவுக்கு செல்வதாக தெரிவித்தனர். தங்களிடம் பல லட்சம் ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்வதாக படகு உரிமையாளர்கள் தெரிவித்ததாகவும் அவர்கள் கூறினார்கள்.
ஆனால் அவர்களிடம் எந்தவித தாஸ்தாவேஜ்களும் இல்லை. எனவே இந்திய கடலோர காவல்படையினர் அவர்களை கைது செய்து அந்தமான் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். 
அவர்களை அந்தமான் காவல் துறையினர் சென்னை கொண்டுவந்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து குடியேற்ற அதிகாரிகள் ஸ்பைஸ் ஜெட் விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைத்தனர். 
2009_ல் நடைபெற்ற இலங்கை உள்நாட்டு போருக்கு பிறகு ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக இலங்கை தமிழர்கள் படகுகள் மூலம் செல்ல முயற்சித்துள்ளனர். அவர்களில் பலருக்கு ஆஸ்திரேலியா அடைக்கலம் கொடுத்தது. 
ஒருசில படகுகள் வழியில் மூழ்கி பெரும் சோகத்தை ஏற்படுத்தியதும் உண்டு. இதனை தொடர்ந்து சட்ட விரோதமாக அடைக்கலம் கேட்டு வந்தால் அவர்களுடைய கோரிக்கையை ஏற்க முடியாது என்று ஆஸ்திரேலியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment