Friday, April 18, 2014

தென் கொரியாவில் சோகம் கடலில் மூழ்கிய மாணவர்கள் பலி எண்ணிக்கை 25 ஆனது!

Friday, April 18, 2014
ஜின்டோ::தென் கொரியாவில் நேற்று முன்தினம் 325 பள்ளி மாணவர்கள் உள்பட 475 பேரை ஏற்றி சென்ற செவோல் என்ற உல்லாச கப்பல் நடுக்கடலில் கவிழ்ந்தது. சுற்றுலா சென்ற போது ஜிஜு தீவு அருகே பலத்த சூறை காற்றால் கப்பல் மூழ்கியது. இதில் 9 மாணவர்கள் பலியாயினர். தகவல் அறிந்ததும் தென் கொரிய கடலோர காவல் படையினரும் கடற்படையினரும் விரைந்து சென்று 150க்கும் மேற்பட்டோரை மீட்டனர்.
 
மேலும் காணாமல் 271 பேரை தேடும் பணி இன்றும் தொடர்கிறது. இதற்கிடையில் கடலில் மூழ்கி இறந்த மாணவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இதனால் தென் கொரிய மக்கள் சோகத்தில் உள்ளனர்.இதற்கிடையில், கப்பல் மூழ்க தொடங்கியதும் பயணிகளை காப்பாற்றாமல், அந்த கப்பலின் கேப்டன் முன்னதாகவே கடலுக்குள் குதித்து உயிர் தப்பியதாக புகார் எழுந்துள்ளது. 69 வயதான கப்பலின் கேப்டன் லீ ஜுன் சீயோக் தலைமறைவாக உள்ளார்.
 
மேலும், கப்பல் மூழ்கத் தொடங்கியதும் உயிர் காக்கும் ஜாக்கெட்டுடன் கப்பல் கேப்டன் அமர்ந்திருந்த காட்சி டிவிக்களில் ஒளிபரப்பாயின. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.Ôஎன் செயலுக்காக பயணிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்Õ என்று கப்பலின் கேப்டன் லீ கேட்டு கொண்டதாகவும், மற்ற கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டதாகவும் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கப்பல் விபத்து ஏற்பட்டதற்கான சூழ்நிலை குறித்து ஆரம்பகட்ட விசாரணை நடைபெற்று வருகிறது என்று கடலோர காவல் படை அதிகாரிகள் தெரிவித்தனர். -

No comments:

Post a Comment