Monday, April 21, 2014

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா சிறப்பாக வளர்ச்சி அடைந்துள்ளது: ராமநாதபுரம் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேச்சு!

Monday, April 21, 2014
ராமநாதபுரம்::காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு ராமநாதபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில்  கலந்து கொண்டு ராமநாதபுரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து பேசினார் அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது வறுமைகோட்டிற்கு கீழே உள்ள மக்களின்  வாழ்க்கை மேம்பட நடவடிக்கை எடுத்துள்ளோம். மீனவர்களுக்கு இலங்கை கடற்படையால் ஏற்படும் துன்பங்களை நான் அறிவேன். இலங்கை கடற்படையால்  மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்சினையை தீர்க்க  நடவடிக்கை எடுக்கப்படும். மதிய உணவு திட்டத்தை நாடு முழுவதும் கொண்டுவர நடவடிக்கை எடுத்தவர் காமராஜர்.
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 15 கோடி மக்கள் வளமான வாழ்வை பெற்றுள்ளனர். உணவு பாதுகாப்பு திட்டத்தை எங்கள் அரசு கொண்டுவந்தது. ஆட்சியாளர்களை கேள்வி கேட்கும் உரிமையை நங்கள் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கொண்டு வந்தோம். ஊழலை எப்படி ஒழிக்கபோகிறார்கள் என்பது குறித்து எதிர்கட்சி தேர்தல் அறிக்கையில் இடம் பெறவில்லை. ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்டத்தை கொண்டு வந்தோம்.
ஆனால் எதிர்கட்சிகள் பல்வேறு தடைகளை ஏற்படுத்தின.அதையேல்லாம் தடுத்து இந்த அரசு லோக்பால் மசோதா நிறைவேற்றியது. காங்கிரஸ் ஆட்சியில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் கொண்டுவரப்பட்டது. திர்கட்சிகள் ஊழலை ஒழிப்பதில் உண்மையான அக்கறை காட்டவில்லை. சதாரண மக்களுக்கான அரசு காங்கிரஸ் தலைமையிலான அரசு. விவசாயிகளுக்கான  அரசு காங்கிரஸ் தலைமையிலான அரசு. முக்கிய 5 சட்டங்களை நிறைவேற்ற எதிர்கட்சிகள் முட்டுகட்டை ஏற்படுத்தின.  பெண்கள்  நேரிடையாக  புகார் அளிக்கும் வகையில் 2000 மகளிர் காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன.
பெண்கள் கோரிக்கையை ஏற்று  சிலிண்டர்களின் எண்ணிக்கையை  12 அக உயர்த்தினோம். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு  மூன்றாவது முறையாக  ஆட்சி அமைக்கும் போது அமையும் போது என்ன செய்ய போகிறோம் என்பதை நான்  உங்களுக்கு சொல்ல போகிறேன். வேலை வாய்ப்புதான் நாட்டில் தலைய பிரச்சினையாக உள்ளது. புதிய தேசிய நெடுஞ்சாலை, ரயில் பாதைகளை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். ஜப்பான் அரசுடன் இணைந்து திட்டங்க்ள் உருவக்கபபடும்.
பல லட்சம் இளைஞர்கள் இதன் மூலம் வேலை வாய்ப்பை பெறுவார்கள். ஏழைகள் உழைப்பாளிகள் மருத்துவத்திற்காக  தங்கள் பணத்தை செலவிடுகின்றனர். இந்த நிலையை மாற்ற காங்கிரஸ் அரசு உறுதி பூண்டுள்ளது. ஒவ்வொருவருக்கும்   இலவச சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுப்போம். மக்கள் விரும்ப கூடிய அரசை தமிழகத்தில் கொண்டு வருவோம்.
 இது நாடாளுமன்ற தேர்தல் . எனவே தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் டெல்லியில் வந்து ஆட்சி அமைக்கப்போவது இல்லை. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் ஒவ்வொரு இந்தியனுக்கும் வீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  மதசார்பற்ற அரசு அமையை நீங்கள் பாடுபட வேண்டும். இந்த கடுமையான  வெயிலை பொருட்படுத்தாமல் இங்கு வருகை புரிந்ததற்கு உங்களுக்கு நான் நன்றி தெரிவித்துகொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment