Monday, April 21, 2014
இலங்கை::மஞ்சள் அங்கி அணிந்து கொண்டு பௌத்தத்துக்கு விரோதமான செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கென புதிய சட்டம் ஒன்றைத் தாம் நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வருகின்றார் என பிரதமர் டி.எம்.ஜயரட்ண தெரிவித்திருக்கிறார்.
கண்டியில், வித்தியா சாஹர மகா பிரிவேனாவில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய சமயமே அவர் இவ்வாறு கூறினார். "மஞ்சள் உடையை விரும்பியவர்கள் யாரும் அணிந்து கொள்ளும் சுதந்திரம் இன்று உள்ளது. எந்தச் சட்டமும் இதைத் தடுக்காது. ஆனால் சிலர் அதனை பௌத்தத்தை அழிப்பதற்காகப் பயன்படுத்த முனைகின்றார்கள். அத்தகையோர் தவறு செய்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களை சட்டத்தின் முன் கொண்டுவந்து, காவி உடையைக் களைந்து விட்டு, தண்டிக்க வேண்டிய ஒரு நிலைமை வந்துவிட்டது." இந்த உத்தேச சட்டத் திருத்தம் குறித்து மகா சங்கத்துடனும் தாம் ஆலோசனை கலக்கவிருக்கின்றார் என்றும் அவர் சொன்னார்.

No comments:
Post a Comment