Wednesday, March 12, 2014
இலங்கை::யாழ்ப்பாணத்தை கலக்கிய சமூக விரோதக் குழுவான ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், நேற்று அதிகாலை ஆறு பேர் சுன்னாகம் பொலிஸாரல் கைது செய்யப்பட்டள்ளனர். சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாமிலுள்ள இளைஞர்களுக்கிடையில் இந்த வாரம் கோஷ்டி மோதல் ஒன்று இடம்பெற்றிருந்தது. இந்த மோதலில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொணடிருந்தனர.
இதன்போது, ஆவா குழுவினர் பயன்படுத்திய பொருட்கள் சில கண்டுபிடிக்கப்பட்டதுடன், ஆவா குழுவினருடன் தொடர்புடையவர்களும் இனங்காணப்பட்டிருந்தனர். இதற்கமைய விசாரணைகளைத் தீவரப்படுத்தியிருந்த பொலிஸார், இச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் குறித்த முகாமிலிருந்த ஆறு பேரை நேற்று அதிகாலை கைது செய்துள்ளனர்.
அண்மைக்காலமாக யாழில் அதிகரித்து வரும் சமூகவிரோதச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக, மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையில் விசேட பொலிஸ் குழுவொன்று அமைக்கப்பட்டிருந்தது. சுன்னாகம் பொலிஸாருடன் இணைந்து பொலிஸ் விசேட குழுவினரே இவர்களைக் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற பொலிஸார், ஆவா குழு தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகளை முடக்கி விடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment