Wednesday, March 12, 2014

அமெரிக்காவினால் சர்வதேச மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கவுள்ள பிரேரணைக்கு எதிராக பிரிட்டனிலுள்ள இலங்கையர் ஆர்ப்பாட்டம்!

Wednesday, March 12, 2014
இலங்கை::இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக அமெரிக்காவினால் சர்வதேச மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கவுள்ள பிரேரணைக்கு எதிராக பிரிட்டனிலுள்ள இலங்கையர்கள் பாரிய ஆர்ப்பாட்டமொன்றைச் செய்தனர்.
இலங்கையைச் சேர்ந்த நூற்றுக்கணக் கானோர் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டம் பிரிட்டிஷ் பிரதமர் அலுவலகத்திற்கு முன் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் சிங்கக் கொடியை காட்டிய வண்ணம் இலங்கையின் பழைமை தன்மையை காட்டிய வண்ணம் ஆர்ப்பாட்டம் செய்த இலங்கையர்கள், தற்போது இலங்கையில் சமாதானம் உள்ளது. “பயத்தை ஏற்படுத்த வேண்டாம்” துப்பாக்கி இல்லை எதிர்பார்ப்புகளை வழங்குங்கள். “சமாதானத்தில் நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம். இலங்கைக்கு உதவி செய்யுங்கள்”. ஒரே நாடு- ஒரே இனம் - ஆகிய பதாகைகளை தாங்கிய வண்ணம் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
யுத்தம் நடைபெற்ற காலத்தில் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டி அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகளால் இலங்கைக்கு எதிராக சர்வதேச மனித உரிமை பேரவையில் பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதே இந்த ஆர்ப்பாட்டத்தின் முக்கிய நோக்கம் என்று பிரிட்டனிலுள்ள இலங்கையர்கள் தெரிவித்தனர்.
இதற்கு மேலதிகமாக இன்னும் சில தினங்களில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் முன்பாக பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை இத்தாலியிலுள்ள இலங்கையர்கள் நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ரோமிலுள்ள இலங்கை அமைப்பு உட்பட பல்வேறு அமைப்புகளிலுள்ள பிரதிநிதிகள் அநேகர் இந்த பாரிய ஆர்ப்பாட்டத்தை நடத்த ஒன்றிணையவுள் ளதுடன் தற்போது ரோமில் ஆர்ப்பாட்டங்கள் பல ஆரம்பிக்கப்பட்டு நடத்தி வருவதாகவும் ஜெனீவாவில் நடத்தவுள்ள பாரிய ஆர்ப்பாட்டத்திற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் ரோமில் உள்ள இலங்கை அமைப்பு தெரிவித்துள்ளது.
தாய்நாட்டுக்காக உயிரை கொடுத்தேனும் செயற்படுவதாகவும் சர்வதேச ரீதியில் இதற்கு எதிராக கொண்டுவரப்படுகின்ற பிரேரணைகளுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் கூடிய வரையில் எடுப்பதாகவும் இத்தாலியிலுள்ள இலங்கையர்கள் குறிப்பிட்டனர். தாங்கள் வெளிநாட்டில் வாழ்ந்தாலும் தாய்நாட்டுக்காக தங்களது கடமைகளை செய்வதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். இலங்கையர்கள் என்ற ரீதியில் இதற்காக இத்தாலியில் உள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் அறிவூட்டுவதுடன் இது தொடர்பில் உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் ரோமிலுள்ள இலங்கையர்கள் அமைப்பு தெரிவித்தது. 

No comments:

Post a Comment