Wednesday, March 12, 2014

யாழ். கல்வியங்காடு நாயன்மார் கட்டுப் பகுதியில் பொதுமக்களின் குடிமனைக்குள் இன்று அதிகாலை புகுந்த முதலை!!

Wednesday, March 12, 2014
இலங்கை::யாழ். கல்வியங்காடு நாயன்மார் கட்டுப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் குடிமனைகளுக்குள் அத்துமீறி புகுந்த முதலையொன்று அப்பகுதி இளைஞர்களால் இன்று பிடிக்கப்ட்டுள்ளது.
 
செம்மணிக் குளத்திலிருந்து நாயன்மார் கட்டு இராஜ வீதியிலுள்ள மக்களின் குடியிருப்புக்குள் இன்று அதிகாலை புகுந்த இந்த முதலையினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் ஒன்று திரண்ட இளைஞர்களினால் முதலை பிடிக்கப்பட்டது. இதனை பெருமளவானவர்கள் சென்று பார்வையிட்டு வருகின்ற நிலையில், கிளிநொச்சி மாவட்ட வனவள அதிகாரிகளிடம் முதலையை ஒப்படைப்பதற்குரிய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

No comments:

Post a Comment