Wednesday, March 12, 2014

கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறையின் ஏற்பாட்டில் தமிழியல் கருத்தரங்கு –தமிழ் நாட்டு பேராசிரியர்கள் பங்கேற்பு!

 Wednesday, March 12, 2014
இலங்கை::கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறையின் ஏற்பாட்டில் தமிழியல் கருத்தரங்கும் கலந்துரையாடலும் திங்கட்கிழமை மாலை மட்டக்களப்பு வந்தாறுமூலையிலுள்ள பல்கலைக்கழத்தில் நடைபெற்றது.

கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவி திருமதி ரூபி வலன்ரீனா பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்ற இக் கருத்தரங்கக் கலந்துரையாடலில்,நாட்டார் வழக்காற்றில் அடிப்படைக் கருத்தாக்கங்கள் எனும் தலைப்பில் தமிழ் நாடு திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தமிழியல்த்துறைத் தலைவர் பேராசிரியர் ஞா.ஸ்டிபன் உரையாற்றினார்.

அதனையடுத்து, மொழியும் இலக்கணமும் என்ற தலைப்பில் பேராதனைப் பல்கலைக்கழக ஓய்வுநிலைப் பேராசிரியர் எம்.ஏ.நுக்மான் உரையாற்றினர்.

சிறப்புப் பேச்சாளர்களான தமிழ் நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் ஞா.ஸ்ரீபன், பேராசிரியர் எம்.ஏ.நுக்மான் ஆகியோர் தொடர்பான அறிமுக உரையினை கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் செ.யோகராஜா நிகழ்த்தினார்.

இதனையடுத்து இலக்கிய, நாட்டாரியல், மொழி, மொழி இலக்கணம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல் நடைபெற்றது.

இக் கருத்தரங்கு, கலந்துரையாடலில் கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள், மற்றும் ஆய்வாளர்கள், ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment