Wednesday, March 12, 2014

யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தழிழக மீனவர்கள் 41 பேர் விடுதலை!

Wednesday, March 12, 2014
இலங்கை::யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தழிழக மீனவர்கள் 41 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் தமிழக மீனவர்களை இன்று ஆஜர்படுத்தியதை அடுத்து, நீதவான் எஸ்.லெனின்குமார் விடுதலை செய்வதற்கான உத்தரவை பிறப்பித்ததாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ் மாவட்ட திணைக்களம் தெரிவித்தது.
தமிழக மீனவர்களின் 07 படகுகளும் விடுவிக்கப்பட்டுள்ளன.
தமிழக மீனவர்கள் 42 பேருக்கான வழக்கு விசாரணை இன்று இடம்பெற்ற போது ஒரு மீனவர் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்க்பட்டுள்ளதால் ஏனைய 41 பேருக்கு மாத்திரம் விடுதலை செய்வதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மீனவருக்கான அடுத்த கட்ட வழக்கு விசாரணை எதிர்வரும் 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட போது நான்கு மீனவர்கள் ஒரு படகுடன் பெப்ரவரி முதலாம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதேவேளை விடுதலை செய்யப்பட்டுள்ள ஏனைய 38 மீனவர்களும் 06 படகுகளுடன் ஜனவரி மாதம் 29 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பகுதியில் கைது செய்யப்ட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment