Wednesday, March 12, 2014
இலங்கை::தமரா குணநாயகம் என்ற மலையகத்தைச் சேர்ந்த ஓர் உயர் குடும்பத்தில் பிறந்த பெண் சர்வதேச இராஜ தந்திரியாக விளங்கி எங்கள் நாட்டுக்கு பெருமை தேடிக் கொடுத்திருக்கிறார். அவர் ஐக்கிய நாடுகள் ஸ்தாப னத்தின் பல்வேறு அமைப்புகளில் உயர் பதவி வகித்த அனுபவமிக்க ஒரு சர்வதேச இராஜதந்திரியாவார்.
இலங்கை::தமரா குணநாயகம் என்ற மலையகத்தைச் சேர்ந்த ஓர் உயர் குடும்பத்தில் பிறந்த பெண் சர்வதேச இராஜ தந்திரியாக விளங்கி எங்கள் நாட்டுக்கு பெருமை தேடிக் கொடுத்திருக்கிறார். அவர் ஐக்கிய நாடுகள் ஸ்தாப னத்தின் பல்வேறு அமைப்புகளில் உயர் பதவி வகித்த அனுபவமிக்க ஒரு சர்வதேச இராஜதந்திரியாவார்.
மூன்றாண்டுகளுக்கு முன்னர் அவர் ஜெனீவா ஐக்கிய நாடு கள் மனித உரிமைப் பேரவையின் தலைமையகத்தில் இல ங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பதவியையும் வகி த்து வந்தார். தற்போது சர்வதேச ரீதியில் பல்வேறு அமை ப்புகளுடன் இணைந்து அவர் செயற்படுகிறார்.
அமெரிக்கா இலங்கையின் மீது யுத்தக்குற்றச்சாட்டுகளையும் மனித உரிமை மீறல்களையும் மையமாகக் கொண்டு பிரே ரணை ஒன்றை ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பித்திருப்பதற்கு இலங்கை மீது அந்நாடு வஞ்சம் தீர்ப்பதற்காக எடுத்த ஒரு செயல் அல்ல என்று தெரிவிக் கும் தமரா குணநாயகம், இலங்கை மீது இத்தகைய ஆதார மற்ற அழுத்தங்களைக் கொண்டு வந்து சர்வதேச ரீதியில் இலங்கையை தனிமைப்படுத்தி அதன் மூலம் தன்னுடைய உள்நோக்கத்தை நிறைவேற்றுவதே அமெரிக்காவின் குறிக் கோள் என்று சுட்டிக்காட்டுகிறார்.
அமெரிக்காவுக்கு ஆசியாவில் ஒரு வலுவான இராணுவ மற் றும் கடற்படைத் தளத்தை அமைத்துக் கொள்ள வேண்டு மென்ற நீண்ட நாள் குறிக்கோள் இருந்து வருகிறது. தற் போது சீனாவும், இந்தியாவும் ஒன்றிணைந்துவிட்டால் இவ் விரு நாடுகளின் இராணுவப் பலத்திற்கும் ஆசியப் பிராந் தியத்தில் அமெரிக்காவுக்கு முகம் கொடுக்க முடியாத ஒரு இக்கட்டான நிலை உருவாகுவதை தவிர்ப்பதற்காக ஆசிய பிராந்தியத்தில் கேந்திர நிலையில் உள்ள இலங்கையில் தனது இராணுவ, கடற்படைத் தளத்தை அமைத்துக் கொள் ளும் நோக்கத்துடனேயே அமெரிக்கா இவ்விதம் இலங்கை க்கு எதிராக ஜெனீவாவில் செயற்படுகிறதென்று தமரா குணநாயகம் மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் பயங்கரவாத யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இடம் பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் நல்லிணக்கப்பாட்டு நடவடிக்கைகள் பற்றிய சரியான தகவல்கள் அவசியம் என்று இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை கொண்டு வரும் போர்வையில் அமெரிக்கா இராணுவ ரீதி யிலான சலுகையை இலங்கையிடம் இருந்து பெறுவதற் கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
அவசியமாயின் தென்சூடானை ஏற்படுத்தியது போன்று இலங் கையையும் பிரிவினைப்படுத்துவதற்கு அமெரிக்கா முயற்சி செய்யலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆங்கில வார இதழொன்றுக்கு அளித்த பேட்டியில் தமரா குணநாயகம், சமாதானத்தை நிலைநாட்டுவோம் என்ற போர் வையில் தெற்காசியாவில் சீனாவும் இந்தியாவும் ஒன்றி ணைந்து ஒரு பலம்வாய்ந்த சக்தியாக மாறிவிடும் என்பத னால் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் ஆசியா தொடர்பான 2012ம் ஆண்டின் கொள்கைக்கு அமைய இந்த இராணுவத் தளத்தை இலங்கையில் ஏற்படுத்துவதற்காகவே அமெரிக்கா செயற்படுகிறதென்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு தமிழர்களின் மனித உரிமைகள் குறித்தோ, தமிழர்களின் சம அந்தஸ்து குறித்தோ எவ்வித அக்கறையும் இல்லை என்று தெரிவித்த தமரா குணநாயகம், இலங்கைக்கு எதி ராக நேரடி தடைகளை விதிப்பதற்கு பதில் இதன் மூலம் அமெரிக்கா தனது எண்ணத்திற்கு தேவையான சலுகை களை இலங்கை அரசாங்கத்திடம் இருந்து பெறுவதற்கு எத் தனிக்கிறதென்று தெரிவித்தார்.
இலங்கையை தோல்வியடைந்த நாடாக உலகிற்கு காண்பிப்பத ற்கு முயற்சி செய்யும் அமெரிக்கா, இலங்கையின் அரச நிறு வனங்களும் நீதித்துறையும் இன்று செயலற்று ஒரு தலைப் பட்சமாக இயங்குகின்றன என்று வெளி உலகிற்கு காண் பிக்க எத்தனிக்கிறதென்றும், தொடர்ச்சியாக மனித உரிமை கள் மீறப்படுவதாகவும் குற்றம் சாட்டுகிறதெனவும் தமரா குணநாயகம் தெரிவித்தார்.
அமெரிக்காவுக்கு ஜெனீவா பிரேரணை வெற்றிபெற வேண் டும் அல்லது வெற்றி பெறாதிருக்க வேண்டுமென்பதில் அக்கறை இல்லாத போதிலும், அந்நாடு இலங்கையை சர் வதேச ரீதியில் தனிமைப்படுத்துவதையே விரும்புகிறதென் றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அமெரிக்கா தனது இந்த இராஜதந்திர சதித்திட்டத்திற்கு எல்.ரி. ரி.ஈ யை ஆதரிக்கும் புலம் பெயர்ந்த தமிழ் அமைப்புக் களையும் அரச சார்பற்ற அமைப்புக்களையும் பகடைக்கா ய்களாக பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment