Wednesday, March 05, 2014
இலங்கை::மன்னார் ஆயர் புலிகளின் கொள்கைகளை முன்னெடுத்து வருவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் புறச் சக்திகளின் தலையீட்டை வலியுறுத்தும் வகையில் மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் நடவடிக்கை எடுத்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மன்னார் ஆயர் பிரித்தானியாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் க்ளோபல் தமிழ் போராம் அமைப்புடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மெய்யாகவே இலங்கையில் சமாதானம் நிலவ வேண்டுமென விரும்பியிருந்தால், புலிகளின் மீது அழுத்தங்களை பிரயோகிக்குமாறு அமெரிக்கா, ஜப்பான், நோர்வே போன்ற நாடுகளிடம் கோரியிருப்பார் என பாதுகாப்பு அமைச்சின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
வன்னிப் போர்க் களத்தில் புலிகள், இராணுவத்தை தோற்கடிப்பார்கள் என பேராயர் ஜோசப் ஆண்டகை கருதியதாகக் குறிப்பிட்டுள்ளார். 2009ம் ஆண்டு மே மாதம் புலிகள் இல்லாதொழிக்கப்பட்டமைக்கு பெருமளவிலான வடக்கு கிழக்கு மக்கள் ஆதரவளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் மன்னார் ஆயர் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். புலிகள் அப்பாவி பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்திக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் பின்னரான தேசிய நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் புலிகள் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தினை விடவும் தற்போது நாட்டின் நிலைமை மோசமாக காணப்படுகின்றது என கத்தோலிக்க பேராயர்கள் சர்வதேச சமூகத்திடம் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment