Wednesday, March 5, 2014

பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்காதிருக்க அங்கத்துவ நாடுகளின் உத்தரவாதம் அவசியம்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மியன்மாரில் உரை!

Wednesday, March 05, 2014
இலங்கை::எனது நாடு பயங்கரவாதத்தினால் சுமார் 3 தசாப்தங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருந்தது. இதனால் எங்கள் நாட்டுக்கு பெருமளவில் மனித அழிவும் பொருளாதார அழிவும் ஏற்பட் டன. இதனால் கடந்த காலத்தில் எங்கள் நாடு வளங்கள் பெற்றிரு ந்த போதிலும் பொருளாதாரத் துறையில் முன்னேற்றம் அடை வது கடினமாக இருந்தது.

பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இலங்கையின் பொருளாதாரம் ஏழு சதவீதம் வளர்ச்சி அடைந்திருப்பது குறித்து நாம் பெரு மைப் படுகிறோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மியன்மாரில் நடைபெற்ற மூன் றாவது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் நேற்று உரையாற்றிய போது தெரிவித்தார். 2004ம் ஆண்டு முதல் முழு உலகமே பயங்கர வாதத்தினாலும் பல்நாடுகளில் வலுப்பெற்று வரும் பயங்கரவாத குற்றச் செயல்களினாலும் பாதிக்கப்பட்டிருந்த கால கட்டத்தில் பிம்ஸ்டெக் அமைப்பு அதன் அணுகு முறையை விஸ்தரித்து பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு அளித்து வந்த அனுசரணை இந் நாடுகளுக்கு பேருதவியாக அமைந்திருந்தது என் றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு; இன்று இலங்கையில் முழுமையாக பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு ள்ள போதிலும் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்காது என்பதற்கு எமக்கு அங்கத்துவ நாடுகளின் உத்தரவாதம் அவசியமாகும். பயங்கரவாத அமைப்புக்களுக்கு சர்வதேச வலையமைப்பின் ஆதரவு இருக்கின்ற காரணத்தினால் இவ் அமைப்பின் நாடுகள் மிகவும் அவதானமாக சதா காலமும் இருப்பது அவசியமாகும்.
எவ்வாறாயினும், எங்கள் அமைப்பில் அங்கத்துவம் பெறும் நாடுகளிடையே இருந்து வரும் ஒத்துழைப்பு தொடர வேண்டும் என்பதே எனது விருப்ப மாகும்.
பயங்கரவாதம் உலகில் எந்தவொரு இடத்தில், எவ்வித கோணத்திலும் தோன்றினாலும் அது சகல நாடுகளின் ஒருமைப்பாட்டான பாதுகாப்புக்கு ஒரு பெரும் அச்சுறுத்தலாக அமையும்.
பிம்ஸ்டெக் அமைப்பின் வரலாற்றில் இவ்வமைப்பின் நிரந்தர செயலகத்தை பங்களாதேஷின் தலைநகரான டாக்கா நகரில் அமைக்க விருப்பது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை மைல்கல்லாக கருதுகிறோம்.
இந்த செயலகத்தை தங்கள் நாட்டில் ஏற்படுத்துவதற்கு இணக்கம் தெரிவித்த பங்களாதேஷ் அரசாங்கத்துக்கு இலங்கை தன் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறது.
 
இந்த செயலகத்துக்கு இலங்கை அரசாங்கத்தின் முழுமையான ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைக்கும் என்று நான் உறுதியாக விரும்புகிறேன். இந்த செயலகத்தின் மூலம் பிம்ஸ்டெக் அமைப்பின் முன்னேற்றத்திற்கு நாம் ஒரு சிறந்த அடித்தளத்தை அமைக்க முடியும்.
இவ் உச்சி மாநாட்டுக்குப் பின்னர் இதன் தலைமைப் பொறுப்பை மியன்மாரிடம் இருந்து ஏற்றுக் கொள்ளும் நேபாள தேசத்திற்கும் நாம் எமது பூரண ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கத் தயாராக இருக்கின்றோம்.
எனது நாடு பிம்ஸ்டெக் அமைப்பின் ஸ்தாபக அங்கத்துவ நாடாகும். நாம் தொழில்நுட்பத்துறையில் வளர்ச்சி அடையும் ஒரு நாடு என்ற முறையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பான நிரந்தர வர்த்தக பேரம் பேசும் குழுவிலும் அங்கத்துவம் வகிக்கின்றோம்.
இதன் மூலம், எதிர்காலத்தில் இப்பிராந்தியத்தில் உள்ள நாடுகளிடையே பொருளாதார ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த முடியும். பிம்ஸ்டெக் அமைப்பு வங்காள விரிகுடா பிராந்தியத்தில் உள்ள நாடுகளிடையே இருந்துவரும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு முக்கிய பங்காற்றி வருகிறது.
ஆசிய நாடுகள், மேற்குத் திசையில் திரும்பி பார்ப்பதைப் போன்று எமது அமைப்பு கிழக்குத் திசையில் பார்த்து தெற்காசிய நாடுகளின் பிராந்தியப் பொருளாதாரத்தை உலக மட்டத்துக்கு உயர்த்துவதற்கு பெரும் பங்காற்றி வருகிறது.
இந்த சந்தர்ப்பத்தில் நான் மியன்மார் குடியரசின் ஜனாதிபதி செயின் சேனுக்கு இந்த உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கும் எங்களுக்கு அளித்த கெளரவத்துக்கும் நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன். உங்கள் அனைவருக்கும் மும்மணிகளின் ஆசிர்வாதம் கிடைக்கப்பெறுமாக...
இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

No comments:

Post a Comment