Tuesday, March 11, 2014

அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தலைமையில் அம்பாரை மாவட்ட அபிவிருத்தி தொடர்பாக அறிவுறுத்தும் கூட்டம்!

Tuesday, March 11, 2014
இலங்கை::அம்பாரை மாவட்ட அபிவிருத்தி தொடர்பாக அறிவுறுத்தும் மாபெரும் கூட்டமொன்று இன்று 2014.03.11 அம்பாரையில் நடைபெற்றது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தலைமையில் வீரசிங்க பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்ற இக்கூட்டத்தில் இவ்வாண்டு அம்பாரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்படவுள்ள நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.

 இதில் அமைச்சர்களான பீ தயாரட்ன ஏ எல் எம் அதாவுல்லா பிரதியமைச்சர் சரத் வீரசேகர பாராளுமன்ற உறுப்பினர்களான எச் எம் எம் ஹரீஸ், பைசால் காசிம் ஷிரியானி விஜயவிக்ரம, எம்.ரீ. ஹஸனலி, பீ எச் பியசேன, கிழக்கு மாகாண ஆளுநர் ரியர்அட்மிரல் மொகான்விஜயவிக்ரம உட்பட மாகாண அமைச்சர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment