Tuesday, March 11, 2014
இலங்கை::சிறைச்சாலையில் விளக்களமறியலில் வைக்கப்பட்டுள்ள வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேம ஜெயந்தவினால் தனக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து வெளியிடுகையிலையே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், எமது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரான டானியல் ரெக்சியன் கொலை குற்றச்சாட்டில் எமது சக உறுப்பினராக கமலேந்திரன் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
எமது கட்சி கொள்கைகளுக்கு மாறான இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கட்சியிலிருந்து கடந்த வருடம் கமலேந்திரனை நீக்கியிருந்தோம்.
இந்நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்தும் அவரை நீக்குவதாக கடந்த 6ம் தேதி கடிதம மூலமாக கூட்டமைப்பின் பொதுச் செயலாளரினால் எனக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அவருடைய எதிர்க்கட்சித் தலைவர் பதவி பறிக்கப்பட்டுள்ள நிலையில், அவருடைய இடத்திற்கு யாரை நியமிப்பதென்பது தொடர்பில் தேர்தல் திணைக்களத்துடன் ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment