Friday, March 7, 2014

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைப் பேரவை விசாரணை நடத்த வேண்டும்: நவனீதம்பிள்ளை!

Friday, March 07, 2014
இலங்கை::இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விசாரணை நடாத்த வேண்டும் என பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கை தொடர்பில் தனியான விசாரணை நடாத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். யுத்தம் நிறைவடைந்து கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் உரிய விசாரணைப் பொறிமுறைமை ஒன்றை உருவாக்காமை வருத்தமளிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நம்பகமானதும் சுயாதீனமானதுமான விசாரணை நடத்துமாறு மனித உரிமைப் பேரவை விடுத்து வரும் கோரிக்கைகளை அரசாங்கம் தொடர்ந்தும் உதாசீனம் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தனது சொந்த விசாரணைப் பொறிமுறைமை ஒன்றை உருவாக்க வேண்டிய தருணம் உருவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விசாரணைக் குழு ஒன்றை நிறுவி சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறைமை ஒன்றை உருவாக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment