Friday, March 7, 2014

நவனீதம்பிள்ளையினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு எங்கிருந்து தகவல்கள் கிடைத்தன: அரசாங்கம் கேள்வி!

Friday, March 07, 2014
இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு எங்கிருந்து தகவல்கள் கிடைத்தன என அரசாங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. இலங்கை தொடர்பில் நவனீதம்பிள்ளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
இலங்கையின வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஐக்கியநாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையை சந்தித்துள்ளார்.

இலங்கை தொடர்பான நவனீதம்பிள்ளையின் நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அமைச்சர் பீரிஸ் இந்த சந்திப்பின் போது சுட்டிக்காட்டியுள்ளார். சில நாடுகள் இலங்கைக்கு எதிராக செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பிலான முன்கூட்டியே தீர்ப்புக்கள், தண்டனை விதிக்கும் நோக்கிலான நகர்வுகள் நாட்டின் நல்லிணக்க முனபை;புக்களை மோசமாக பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சில நாடுகளின் அரசியல் சக்திகள் தேர்தல் வெற்றிக்காக இலங்கையை உதை பந்தாக பயன்படுத்தி வருகின்றன என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் எடுத்து வரும் முனைப்புக்கள் குறித்து அமைச்சர் பீரிஸ், நவனீதம்பிள்ளைக்கு தெளிவுபடுத்தியுள்ளார். யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட வலயங்களில் அபிவிருத்திப் பணிகள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

நவனீதம்பிள்ளையின் அறி;க்கை ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அமையவில்லை எனவும், அதன் தரவு உள்ளடக்கங்கள் பிழையானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.பக்கச்சார்பான முறையில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். நவனீதம்பிள்ளையின் அறிக்கையான ஒரு பக்கச்சார்பானதும், அரசியல் ரீதியான நோக்கங்களைக் கொண்டதுமாக அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அறி;க்கையில் இலங்கையின் பதில் விளக்கங்கள் உள்ளடக்கப்படாமை துரதிஸ்டவசமானது என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment