Friday, March 07, 2014
இலங்கை::இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை வலுவிழக்கச் செய்ய வேண்டாம் என
இந்தியாவிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில், அமெரிக்காவினால்
இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட உள்ள தீர்மானத்தை இந்தியா வலுவிழக்கச்
செய்யக் கூடாது என வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானத்தை எவ்வாறு கடுமையாக்குவது என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆராய்ந்து வருவதாக பாதுகாப்பு மற்றும் அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விசேட பிரதிநிதிகள் விரைவில் இந்தியாவிற்கு விஜயம் செய்து, தீர்மானத்தை வலுவிழக்கச் செய்ய வேண்டாம் என கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கைக்கு எதிராக வலுவாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவதனை நோக்கமாகக் கொண்டு இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்திய அதிகாரிகளுக்கு மேலதிகமாக, இலங்கைக்கான வெளிநாட்டு ராஜதந்திரிகளையும் சந்தித்து தீர்மானத்தை வலுவடையச் செய்ய தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment