Friday, March 07, 2014
இலங்கை::தலைமன்னார் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 09 பேரையும் எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் உத்தரவிட்டார்.
இவர்களை மன்னார் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (07) ஆஜர்படுத்தியபோதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
02 படகுகளில் வந்த 09 இந்திய மீனவர்களையும் வியாழக்கிழமை (06) காலை கைதுசெய்த கடற்படையினர், இவர்களை தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இது இவ்வாறிருக்க, தலைமன்னார் கடற்பரப்பில் புதன்கிழமை (05) இரவு கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 15 பேருக்கும் எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment