Friday, March 07, 2014
இலங்கை::இலங்கைக்கு தேவையான சகல அடிப்படை வளங்களும் நாட்டுக்குள் இருப்பதால் எத்தகைய பொருளாதார தடைகளை விதித்தாலும் இலங்கையை எவராலும் வீழ்த்த முடியாது என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இரத்கம பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டுக்கு தேவையான அடிப்படை வளங்கள் உள்நாட்டில் இல்லாத நிலையிலேயே பொருளாதார தடைகளால் நாட்டை வீழ்த்த முடியும். ஆனால் இலங்கைக்குள் சகல வளங்களும் உள்ளன.
உலகில் பல நாடுகளில் வேலை வாய்ப்பு பிரச்சினைகள் உக்கிரமடைந்துள்ளன. வல்லரசான அமெரிக்காவில் வேலை வாய்ப்பு இல்லாதவர்களின் எண்ணிக்கை 12 வீதமாக அதிகரித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளிலும் இந்த பிரச்சினை உக்கிரமடைந்துள்ளது. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், வேலை வாய்ப்பு பிரச்சினைகள் இலங்கையில் குறைந்துள்ளன.
சில பிரச்சினைகள் இலங்கைக்கு மட்டுமே உரிய பிரச்சினைகள் அல்ல. முழு உலக சமூகமும் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளாகும். அப்படி பார்க்கும்போது இலங்கை மிகவும் அதிர்ஷ்டமானது என்றார்.

No comments:
Post a Comment