Saturday, March 8, 2014

பிரதமராக ஆதரவு: மம்தா பானர்ஜிக்கு ஜெயலலிதா நன்றி!!

Saturday, March 08, 2014
சென்னை::தான் பிரதமர் ஆவதற்கு ஆதரவு தெரிவித்த மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜிக்கு, தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா நன்றி தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த மம்தா பானர்ஜி, பிரதமராக விரும்பும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவளிப்பதில் தமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று குறிப்பிட்டார்.

மம்தா பானர்ஜியின் இந்த ஆதரவுக்கு, அவரை நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்ததாக திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் உயர் வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், இந்தத் தொலைபேசி உரையாடலின்போது, மக்களவைத் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிக்கான சாத்தியங்கள் குறித்தும் இருவரும் பேசியதாக கூறப்படுகிறது.

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிக்கு முக்கிய அரசியல் எதிரிகளாகவே இடதுசாரிகள் கருதப்படுகிறார்கள்.

அதிமுக கூட்டணியில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சிகள் விலகிய மறுநாளில், மம்தா பானர்ஜியும் ஜெயலலிதாவும் பேசியிருப்பது கவனிக்கத்தக்கது. 
 

No comments:

Post a Comment