Friday, March 07, 2014
இலங்கை::இலங்கைக்கு மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஆப்கானிஸ்தான்
ஜனாதிபதி ஹமீட் கர்சாய்க்கு, ஜனாதிபதி செயலகத்தில் பிரமாண்டமான முறையில் செங்கம்பள
வரவேற்பளிக்கப்பட்டது.
ஜனாதிபதி செயலகத்தை வந்தடைந்த ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வரவேற்றார். இவருக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டு 21 பீரங்கி வேட்டுகளும் தீர்க்கப்பட்டன.
இதனையடுத்து இரு நாட்டுத் தலைவர்களுக்குமிடையில் விரிவான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதுடன், கல்வி, சுகாதாரம், விளையாட்டு, வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு உள்ளிட்ட நான்கு துறைகளில் இரு நாட்டுக்குமிடையில் ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தியுள்ளார் என இந்நிகழ்வில் குறிப்பிட்ட ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீட் கர்சாய், சமாதானமே மனித உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச நாடுகள் எதை முன்வைத்தாலும், சமாதானமே மனித உரிமைக்கான உத்தரவாதமாகும், மோதல்கள் மனித உரிமைகளின் எதிரி. மனிதவிருத்தி மற்றும் அபிவிருத்திக்கு சமாதானமே சிறந்த வாகனமாகும். இலங்கையில் இதனை எம்மால் காணக்கூடியதாகவிருக்கிறது. இலங்கைக்கு எமது பாராட்டுக்கள்” என ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீட் கர்சாய், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடனான சந்திப்பின்போது கூறினார்.
இருநாட்டுத் தலைவர்களுக்குமிடையிலான சந்திப்பில் இருநாடுகளின் பிரதிநிதிகள் குழுவும் அங்கம் வகித்தனர்.
பல்வேறு விடயங்களில் இரு நாட்டுக்கும் இடையில் கலாசார பாரம்பரியம், பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் நட்பு என்பன பொதுவாகக் காணப்படுகின்றன. உங்களின் இலங்கை விஜயம் இந்த உறவுகளை மேலும் நெருக்கமாக்கும்” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், ஆப்கான் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் கலாசார முறைப்படி சிறப்பாக வழங்கப்பட்ட வரவேற்புக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த ஹமீட் கர்சாய், பல்வேறு சர்வதேச நாடுகளுக்குச் சென்றுள்ளபோதும் இதைப்போன்றதொரு வரவேற்பு வழங்கப்படவில்லையென்றும் குறிப்பிட்டார்.
இது எனக்கும் எனது குழுவினருக்கும் மகிழ்ச்சியைத் தரவில்லை. ஆப்கானிஸ்தான் மக்களுக்கே மகிழ்ச்சியைத் தருகிறது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆப்கானிஸ்தான் எதிர்கொண்டிருக்கும் சவால்களை முகங்கொடுக்க ஹமீட் கர்சாய் வழங்கும் தலைமைத்துவத்தையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பாராட்டினார்.
“ஆப்கானிஸ்தான் வரலாற்றில் மிகவும் முக்கியமான காலகட்டத்தில் நீங்கள் வழங்கிய தலைமைத்துவம் குறித்து மெச்சுகிறேன். குறிப்பாக ஆப்கானிஸ்தானில் சமாதானத்தை ஏற்படுத்த நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகள், ஆப்கானிஸ்தான் மக்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுப்பார்கள் என நம்புகின்றேன். ஆப்கானிஸ்தானில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் அமைதியாக நடைபெறவும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.
தான் இறுதியாக இலங்கைக்கு வந்ததைவிட தற்பொழுது நாடு பாரிய மாற்றத்தைக் காணக்கூடியதாக உள்ளது எனச் சுட்டிக்காட்டிய ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீட் கர்சாய், இலங்கையின் பொருளாதார மற்றும் அபிவிருத்திச் சுட்டிகள் தெற்காசியாவிலேயே உயர்ந்த இடத்தில் இருப்பதையும் நினைவுகூர்ந்தார்.
கல்வித்துறையில் இரு நாட்டுக்குமிடையில் ஒத்துழைப்புக்களை வழங்குவது குறித்து இக்கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது. ஆப்கானிஸ்தான் மாணவர்கள் இலங்கையில் வந்து மருத்துவம், பொறியியல், தாதியர் மற்றும் வர்த்தகத்துறைகளில் கல்வியைத் தொடர்வது ஒத்துழைப்புக் குறித்து இச்சந்திப்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
ஆப்கானிஸ்தானின் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்வது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது. குறிப்பாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு இலங்கையிலிருந்து பயிற்றுவிப்பாளர்களை அழைப்பித்து பயிற்சிகளைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
அதேநேரம், இரு நாட்டுக்குமிடையில் நான்கு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன. ஆப்கானிஸ்தான் தாதியர்களுக்கு இலங்கையில் பயிற்சிகளை வழங்குவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது. இதில் இலங்கை சார்பில் சுகாதாரத்துறை அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவும், ஆப்கானிஸ்தான் சார்பில் அந்நாட்டு பொது சுகாதார அமைச்சர் சொராய்யா டாஹ்லில் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
கல்வித்துறையில் ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கையின் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவும், ஆப்கானிஸ்தான் கல்வி அமைச்சர் ஒபைதுல்லா ஒபைய்ட் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
இலங்கையைச் சேர்ந்த திறமைவாய்ந்தவர்கள் மற்றும் நிபுணர்களுக்கு ஆப்கானிஸ்தானில் வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேராவும், அந்நாட்டு அமைச்சர் அமினா சபி அவ்சாலி ஆகியோரும் கைச்சாத்திட்டனர்.
விளையாட்டுத்துறையில் ஒத்துழைப்பு வழங்குவது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் அந்நாட்டு அமைச்சர் அமினா சபி அவ்சாலி ஆகியோரும் கைச்சாத்திட்டனர்.
இச்சந்திப்பில் அமைச்சர்களான டலஸ் அழகப்பெரும, ஜெகத் பாலசூரிய, லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன, ரிசாட் பதியுதீன், கெஹலிய ரம்புக்வெல, பிரதியமைச்சர் நியோமல் பெரேரா, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, நிதியமைச்சின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

No comments:
Post a Comment