Friday, March 07, 2014
சென்னை::மத்திய அரசு தமிழர்களை வஞ்சித்துவிட்டது. காவிரி
மேலாண்மை வாரியம் அமையவிடாமல் மத்திய அரசு தாமதம் செய்கிறது. லோக்சபா
தேர்தலில் காங்கிரஸ், திமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று தமிழக
முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார். மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசை
தூக்கியெறிய வேண்டும். தமிழக மீனவர்கள் தாக்கப்படாமல் இருக்க கச்சத்தீவை
மீட்பதுதான் நமக்கு இருக்கும் ஒரே வழி. கச்சத்தீவு பகுதியில் நமக்குள்ள
உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
அதிமுக பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா இம்மாதம் 3_ம் தேதி காஞ்சிபுரத்தில் தமது முதல் கட்ட தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.
காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே திரளாக கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களிடையே உரை நிகழ்த்தி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவு திரட்டினார்.
அதையடுத்து இரண்டாவது நாளாக ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா பங்கேற்று அந்த தொகுதியின் வேட்பாளர் கே.என்.ராமச்சந்திரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
இதையடுத்து 3_வது நாளாக நேற்று நாகப்பட்டினம் மற்றும் மயிலாடு துறை மக்களவை தொகுதிகளில் நடை பெறும் மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசினார்.
மக்களவை தேர்தலை ஒட்டி அதிமுக வேட்பாளரை ஆதரித்து மூன்றாவது நாளாக நாகையில் நேற்று முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் மேற்கொண்டார். நாகை லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளர் கே.கோபாலை ஆதரித்து அவுரித்திடலில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:_
காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக எழுச்சியுடன் மக்கள் கூடியுள்ளனர். லோக்சபா தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல. அண்டை நாடுகளின் அச்சுறுத்தல்களில் இருந்து இந்தியாவை காக்கும் தேர்தல். இந்தியாவை பாதுகாக்க நமது பாதுகாப்புத்துறை வலுவானதாக இருக்க வேண்டும். முப்படைகளின் தேவைகளை நிறைவேற்ற மத்திய அரசு போதிய அக்கறை காட்டவில்லை. பாதுகாப்புத்துறையே பாதுகாப்பாற்றதாக ஆக்கிவிட்டது மத்திய அரசு. இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தல், சிறைபிடிப்புக்கு மீனவர்கள் ஆட்படுத்தப்படுகிறார்கள்.
இந்தப் பகுதி மீனவர்கள் நிறைந்த பகுதி. மீன் பிடித் தொழில் நிறைந்த பகுதி. ஆனால் இந்தத் தொழிலில் எத்தகைய இடைக்ஷ்றுகளை, இன்னல்களை ஞிங்கள் எதிர்கொண்டு இருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தல்களுக்கும்; கொடுமைகளுக்கும்; சிறைபிடிப்புகளுக்கும்; ஞிங்கள் அடிக்கடி ஆட்படுத்தப்படுகிறீர்கள். இவை நிகழும்போதெல்லாம் உடனடியாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மூலமும், தூதரக நடவடிக்கைகள் மூலமும், தமிழக மீனவர்கள் விடுவிக்கப் படுவதற்கான நடவடிக்கைகளை நான் எடுத்து வருகிறேன்.
தமிழக மீனவர்கள் அன்றாடம் தங்களது மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள சாத்தியமான ஒரு தீர்வினை காணும் பொருட்டு 27.1.2014 அன்று சென்னையில் தமிழக மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நடைபெற நான் ஏற்பாடு செய்தேன். இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு முன்பு இலங்கை சிறைகளில் வாடிக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினேன். எனது வலியுறுத்தலின் பேரில் தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இரு நாட்டு மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் ஆக்கப்ஞீர்வமான முடிவு ஏற்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் இரு நாட்டு மீனவர்களுக்கு இடையேயான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை 13.3.2014 அன்று இலங்கையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற ஏதுவாக இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன் இலங்கை அரசு விடுவிக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் எனது தலைமையிலான தமிழக அரசு விதித்துள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தைக்கான நாள் முடிவு செய்யப்பட்ட பின்னரும் இதனை சீர்குலைக்கும் வகையில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து 8 படகுகளில் 3.3.2014 அன்று மீன் பிடிக்கச் சென்ற 30 தமிழக மீனவர்களையும், 2 காரைக்கால் மீனவர்களையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது.
கடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர், இதுவரை 148 தமிழக மீனவர்கள் கடல் எல்லையை தாண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு உள்ளனர். இவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி நான் பாரதப் பிரதமருக்கு கடிதங்களை எழுதி உள்ளேன். இருப்பினும் இலங்கை அரசின் இந்தச் செயலை இந்திய அரசு கண்டிக்கவும் இல்லை; விடுவிக்க நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது கடிதங்களுக்கு பாரதப் பிரதமர் பதிலும் அனுப்பவில்லை. நேற்றும், இன்றும் கூட 24 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் மியான்மாரில் நடைபெற்ற மூன்றாவது வங்காள விரிகுடா நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு முயற்சிகள் மாநாட்டில் இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் பாரத பிரதமர் மன்மோகன் சிங் கைகுலுக்கிய படம் பத்திரிகைகளில் வெளி வந்துள்ளது. தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கான என்ன நடவடிக்கையை இந்திய பிரதமர் எடுத்துள்ளார்? தமிழ்நாட்டு மீனவர்கள் இந்திய குடிமக்கள் தான். எங்கள் இந்திய மீனவர்களை விடுதலை செய்யுங்கள்! எங்கள் இந்திய மீனவர்களை சிறைபிடிப்பதை நிறுத்துங்கள் என்று கண்டிப்புடன் சொல்வதை விட்டுவிட்டு இலங்கை அதிபருடன் கை குலுக்குகிறார் பாரதப் பிரதமர். இப்படிப்பட்ட பிரதமர் தேவை தானா? இப்படிப்பட்ட காங்கிரஸ் ஆட்சி தேவை தானா? தூக்கி எறிய வேண்டாமா? தூக்கி எறிய வேண்டும். செய்வீர்களா? ஞிங்கள் செய்வீர்களா? (செய்வோம் என பலத்த கரகோஷம்)
இலங்கையில் நடைபெறும் மீனவர் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறவேண்டும். இப்பேச்சுவார்த்தைக்கு முன்னர் இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்.
இப்படிப்பட்ட காங்கிரஸ் ஆட்சி தேவைதானா?மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசை தூக்கியெறிய வேண்டும். தமிழக மீனவர்கள் தாக்கப்படாமல் இருக்க கச்சத்தீவை மீட்பதுதான் நமக்கு இருக்கும் ஒரே வழி. கச்சத்தீவு பகுதியில் நமக்குள்ள உரிமையை நிலைநாட்ட வேண்டும்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

.jpg)
No comments:
Post a Comment