Thursday, March 6, 2014

ஜெனீவாவில் அனந்தியின் வாயை மூடிய சுமந்திரன் எம்.பி!

Thursday, March 06, 2014
இலங்கை::
ஜெனீவாவில் சர்வதேச பிரதிநிதிகளை சந்தித்தவேளை, வட மகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனை சுமந்திரன் எம்.பி கட்டுப்படுத்தியதாக அனந்தி பத்திரிகையாளர்கள் முன்னிலையில் ஒப்புதல் அளித்துள்ளார்.

இன்று யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அனந்தி மேலும் தெரிவித்ததாவது, ஜெனீவாவில் சர்வதேச பிரநிதிகளைச் சந்தித்து காணாமல் போனோர் தொடர்பிலும், தாயகத்தில் எமது மக்கள் எதிர்கொண்டு வருகின்ற நெருக்கடி நிலை மற்றும் இறுதிப்போரின் போது நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் கதைப்பதற்காகச் சென்றிருந்தேன்.
 
ஆனாலும் சந்திப்புக்களை மேற்கொள்ளச் சென்றபோது, எங்களை அழைத்துச் சென்ற சுமந்திரன், ‘உங்களை புலிகளாகவே சர்வதேச பிரதிநிதிகள் பார்க்கிறார்கள். எனவே, நீங்கள் ஒன்றும் கதைக்கவேண்டாம்’ என்று தன்னை கட்டுப்படுத்தியதாக தெரிவித்த அனந்தி, தான் ஜெனீவா செல்லும் வரையில் தனக்கு இவ்வாறான ஒரு நிலை ஏற்படும் என்பதை தான் அறிந்திருக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
 
இதனிடையே, ஜெனீவாவில் அமெரிக்கா முன்வைத்துள்ள பிரேரணை குறித்து காணாமல் போனோரின் உறவினர்கள் கண்ணீர் மல்க தன்னிடம் கவலை வெளியிட்டதாகவும், சர்வதேசத்தை மட்டுமே நம்பியிருந்தோம், இறுதியில் சர்வதேசமும் கைவிட்டுவிட்டது என்று அவர்கள் தெரிவித்ததாகவும் குறிப்பிட்ட அனந்தி, போர்க்குற்றம் தொடர்பில் குறித்த வரைபில் குறிப்பிடப்படாமை குறித்தும் கவலை வெளியிட்டார்.

No comments:

Post a Comment