Thursday, March 6, 2014

நாவற்குழியில் மனைவியை கழுத்து நெரித்துக் கொன்றவருக்கு மரண தண்டணை !

Thursday, March 06, 2014
இலங்கை::
நாவற்குழியில் இடம்பெற்ற குடும்பத் தகராறு ஒன்றில் தனது மனைவியான ஒன்பது மாதக் கர்ப்பணிப் பெண்ணை கழுத்து நெறுக்கி கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சுரேஷ் என்பருக்கு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம் சங்கர் மரண தண்டணை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 20008ம் ஆண்டு நாவற்குழியில் வசித்து வந்த குடும்பமொன்றின் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட குடும்பத் தகராறில், கர்ப்பிணியான தனது மனைவியை கழுத்து நெரித்து கணவன் கொன்றுள்ளார். இதனைத் தொடர்ந்து கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கொலையாளியின் கணவரான சுரேஷ் குமார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் .
 
இந்த வழக்கு சாவகச்சேரி நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்திருந்த நிலையில், யாழ். மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டிருந்தது. இதனையடுத்து மேல் நீதிமன்ற நீதிபதி அ.பிரேம் சங்கர் முன்னிலையில் வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது குற்றவாளிக்கு மரண தண்டணை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.

No comments:

Post a Comment