Sunday, March 16, 2014
சென்னை::தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை வெறும் புளுகு மூட்டையாகத்தான் இருக்கிறது என்றும், அதை கருணாநிதி அவிழ்த்து விட்டு வழக்கமான கோயாபல்ஸ் பணியை மேற்கொண்டுள்ளார் என்றும் முதல்வர் ஜெயலலிதா கடுமையாக தாக்கி பேசியுள்ளார். முதல்வர் ஜெயலலிதா நேற்று தூத்துக்குடியில் அ.தி.மு.க.வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:_
நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் காரணமாக இருந்து தி.மு.க. நான்கு நாட்களுக்கு முன்பு தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அந்தத் தேர்தல் அறிக்கையில் 98 தலைப்புகளில் வாக்குறுதிகள் என்ற பெயரில் புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டு இருக்கிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. இவைகள் எல்லாம் வாக்குறுதிகள் அல்ல. இவைகள் எவற்றின் மீதும் கடந்த பத்து ஆண்டுகளில் தி.மு.க. எந்த வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. எவை எவை குறித்து தி.மு.க_வால் இதுவரை நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்பதைத் தான் பட்டியலிட்டு இருக்கிறார் கருணாநிதி. அதாவது தன்னுடைய தோல்விகளை ஒப்புக் கொண்டு இருக்கிறார் கருணாநிதி.
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் ஆலோசனையைப் பெற்று தான் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு நடவடிக்கை எடுக்கிறது என்று பாரதப் பிரதமரே ஒரு முறை தெரிவித்து இருக்கிறார். பாரதப் பிரதமரின் இந்தக் கூற்றினை தி.மு.க_வினரும் பல முறை வழிமொழிந்து இருக்கிறார்கள். அப்படியென்றால் தி.மு.க_வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப் படாததற்கு காரணம் தி.மு.க. தலைவர் கருணாநிதி தானே? இந்த நிலையில் மீண்டும் வாக்குறுதிகளை அள்ளி வீசி யாரை ஏமாற்றப் பார்க்கிறார் கருணாநிதி?
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தால் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் தனி நபர் வருமான வரி உச்ச வரம்பு 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதைவிட அதிகமான தொகையை அறிவிக்க வேண்டும் என்று எண்ணி தனி நபர் வருமான வரி உச்ச வரம்பு 6 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று தி.மு.க. அறிவித்து இருக்கிறது. கடந்த 17 ஆண்டு காலமாக மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த தி.மு.க. ஏன் இதைச் செய்யவில்லை? கடந்த 17 ஆண்டுகளில் ஓர் ஆண்டிற்கு 20 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் தனி நபர் வருமான வரி உச்ச வரம்பினை உயர்த்தியிருந்தாலே; தற்போது கிட்டத்தட்ட 5 லட்சம் பொய் அளவுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்குமே? 17 ஆண்டுகளாக இதைப் பற்றி யோசிக்காமல் இப்போது திடீர் டானோதயம் வந்தது போல் கருணாநிதி வாக்குறுதி அளித்து இருப்பது மக்களை ஏமாற்றும் செயல். இப்படிப்பட்ட ஏமாற்றுப் பேர்வழிக்கு வருகின்ற மக்களவைத் தேர்தலில் நீங்கள் மறக்க முடியாத பாடம் கற்பிக்க வேண்டும் என்று உங்களையெல்லாம் வேண்டி கேட்டுக் கொள்கிறேன். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? (செய்வோம் என பலத்த கரகோஷம்)
இன்னொரு வெத்துவேட்டு வாக்குறுதி தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது, அரசு பணிகளில் இருந்து ஓய்வு பெறும் அலுவலர்களுக்கு ஓய்வு நாளில் வழங்கப்படும் ஓய்வூதியப் பணிக் கொடைக்கு வருமானவரி விலக்கு அளித்திட மத்திய அரசை தி.மு.க. வலியுறுத்தும் என்று தமிழில் வெளியிடப்பட்ட தி.மு.க_வின் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் பணிக்கொடை மற்றும் வருங்கால வைப்பு நிதிக்கு வருமான வரி விலக்கு அளித்திட தி.மு.க. வலியுறுத்தும் என்று கூறப்பட்டு இருக்கிறது. இதை நீங்கள் நன்றாக கவனிக்க வேண்டும். வருமான வரிச் சட்டத்தின்படி ஓய்வு பெறும் நாளில் வழங்கப்படும் பணிக்கொடைக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, அதற்கு வருமான வரி ஏதும் கட்டத் தேவையில்லை. இதே போன்று வருங்கால வைப்பு நிதிக்கும் வருமானி வரி விலக்கு அளிக்க வருமான வரிச் சட்டத்தில் ஏற்கெனவே வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது.
அதாவது ஓய்வு பெறும் போது வழங்கப்படும் வருங்கால வைப்பு நிதி தொகைக்கும் பணிக்கொடைக்கும் வருமான வரி செலுத்தத் தேவையில்லை. ஏற்கெனவே வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ள இனங்களை தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு அதற்காக தி.மு.க. பாடுபடும் என்று கூறியிருப்பது எவ்வளவு பெரிய மோசடி; எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். தேர்தல் அறிக்கையில் உள்ள அம்சங்களை கருணாநிதி படித்துப் பார்த்தாரா? அல்லது தேர்தல் அறிக்கைக் குழு எழுதிக் கொடுத்ததை அப்படியே வெளியிட்டுவிட்டாரா என்பதற்கு கருணாநிதி தான் பதில் அளிக்க வேண்டும். தி.மு.க_வைச் சார்ந்தவர் தான் கடந்த ஆண்டு வரை நிதித் துறை இணை அமைச்சராக பதவி வகித்து இருக்கிறார் என்பதை வைத்துப் பார்க்கும் போது; மக்களை ஏமாற்றவே இவ்வாறு வெளியிடப்பட்டு இருக்கிறதோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.
இப்படி எல்லாம் மக்களை ஏமாற்றும் தி.மு.க_வை; புளுகு மூட்டையை அவிழ்த்து விடும் தி.மு.க_வை; வருகின்ற மக்களவைத் தேர்தலில் நீங்கள் முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்று உங்களையெல்லாம் கேட்டுக் கொள்கிறேன். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? (செய்வோம் என பலத்த ஆரவாரம்)
சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை முற்றிலுமாகத் தடை செய்வதற்கு தி.மு.கழகம் பாடுபடும் என்றும் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டிற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்துவிட்டு; தேர்தல் அறிக்கையில் தி.மு.க. அதனை எதிர்க்கும் என்று கூறி இருக்கிறார் திரு. கருணாநிதி. இது ஒரு மிகப் பெரிய ஏமாற்று வேலை; கபட நாடகம்; பொய் பித்தலாட்டத்தின் உச்சகட்டம்.
சில்லரை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிப்பது ஆபத்தானது. லட்சக்கணக்கான சில்லரை வணிகர்களையும்; ஏழை எளிய மக்களையும் பாதிக்கும். எனவே மத்திய அரசு இந்த முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று 29.11.2011 அன்று மத்திய அரசை வலியுறுத்தி ஓர் அறிக்கையை வெளியிட்டார் கருணாநிதி. அப்போது தி.மு.க_வும் மத்திய அரசில் அங்கம் வகித்தது.
பின்னர் 14.9.2012 அன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த கருணாநிதி +... பல்வகைப் பொருட்கள் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு வந்தால்; இங்கேயுள்ள சிறு வணிகர்களுக்கும் அவர்களை நம்பி இருப்போருக்கும் பெரும் போட்டியாக அமைந்துவிடும் என்று கூறினார். அப்போதும் தி.மு.க. மத்திய அரசில் அங்கம் வகித்தது. இதனைத் தொடர்ந்து 20.9.2012 அன்று நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் தி.மு.க. பங்கேற்கும் என அறிவித்தார் கருணாநிதி.
கருணாநிதியின் அறிவிப்யைத் தொடர்ந்து 25.11.2012 அன்று மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் கருணாநிதியை சென்னையில் சந்தித்துப் பேசினார். இருவரும் என்ன பேசினார்கள் என்பது யாருக்கும் தெரியாது. இதன் தொடர்ச்சியாக சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு பற்றி ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்; ஆட்சி கவிழாமல் இருக்க மத்திய அரசுக்கு தி.மு.க. ஆதரவு தரும் என்று கருணாநிதி 28.11.2012 அன்று ஓர் அறிக்கையை வெளியிட்டு தனது நிலையை மாற்றிக் கொண்டார். சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு குறித்து மக்களவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் தி.மு.க. மக்களவை உறுப்பினர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு ஆதரவாக; சில்லரை வணிகர்களுக்கு எதிராக வாக்களித்தனர். வாக்கெடுப்பிற்குப் பின் பேட்டியளித்த கருணாநிதி +நிலையான மத்திய அரசு கவிழ்ந்து விடக் கூடாது என்ற என்னுடைய கருத்து, இந்த வாக்கெடுப்பின் மூலமாக வெற்றி பெற்றிருக்கிறது என்று கூறினார்.
இதோடு கருணாநிதி நின்றுவிடவில்லை. சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு என்ற நிலை தமிழகத்தில் இல்லை என்று தமிழக முதலமைச்சரே சொல்லி விட்டதால், அதாவது சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை தமிழ் நாட்டில் எனது அரசு அனுமதிக்காது என்று நான் சொல்லிவிட்டதால், இங்கேயுள்ள சிறு வணிகர்களுக்கோ, விவசாயிகளுக்கோ எந்த விதமான ஆபத்தும் ஏற்படாது என்பதால் தான் மத்திய அரசை தி.மு.க. ஆதரித்ததாக தெரிவித்துள்ளார் கருணாநிதி. சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டினை நாடாளுமன்றத்தில் அன்று வெற்றி பெறச் செய்த திரு. கருணாநிதி; இன்று அதனை தடை செய்ய பாடுபடுவோம் என்று அந்தர்பல்டி அடித்து இருக்கிறார். இப்படி சழ்நிலைகளுக்கு ஏற்ப, தன்னலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் பச்சோந்தி போன்ற கருணாநிதியை தலைவராகக் கொண்ட தி.மு.க_வை தமிழக மக்கள் இன்னமும் நம்பத் தயாராக இல்லை.
சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு என்ற கொள்கையை அன்றும், இன்றும், என்றும் எதிர்க்கின்ற கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். மத்திய அரசின் கொள்கைகளை வகுக்கும் வாய்ப்பு, வரும் நாடாளுமன்ற தேர்தலில் உங்கள் மூலம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு கிடைக்கும் போது; சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு ஒழித்துக் கட்டப்படும் என்ற வாக்குறுதியை இந்த நேரத்தில் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். சில்லரை வணிகத்தை நம்பியிருக்கும் பல கோடி வணிகர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க துணை போன தி.மு.க_வை இந்தத் தேர்தலில் நீங்கள் தூக்கி எறிய வேண்டும் என்று உங்களை அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? (செய்வோம் என பலத்த கரகோஷம்)
இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்காத அரசு தற்போதைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு.
தமிழக மீனவர்களை "பேராசை பிடித்தவர்கள்" என்று கூறிய கருணாநிதி தி.மு.க_வின் தேர்தல் அறிக்கையில் மீனவர் நலன் குறித்து நீட்டி முழக்கி இருக்கிறார். தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் மீனவர்களுக்கு என்னென்ன செய்யப் போகிறோம் என்பதை பட்டியலிட்டு இன்னொரு புளுகு மூட்டையை அவிழ்த்துவிட்டு உள்ளது. கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த கட்சி தி.மு.க.. தி.மு.க. மத்திய ஆட்சியிலிருந்து வெளியேறிய பிறகும் தன் மகள் கனிமொழிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பெற்றுத் தர காங்கிரஸ் கட்சியிடம் மன்றாடிய கருணாநிதி; மீனவர் நலன் குறித்து ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது ஏன் சிந்திக்கவில்லை? அதற்காக அப்போது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? தேர்தலுக்கு முன்பே என்னென்ன வளம் கொழிக்கும் இலாக்காக்கள் வழங்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியுடன் ஒப்பந்தம் போட்டவர் கருணாநிதி. அந்த ஒப்பந்தத்தின்படி இலாகாக்களை வழங்காததால் அமைச்சர் பதவிகளை தி.மு.க_வினர் முதலில் ஏற்கவில்லை. பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கூட கலந்து கொள்ளாமல் சென்னை திரும்பிவிட்டார்
கருணாநிதி. பின்னர், கருணாநிதி கேட்ட இலாகாக்கள் தி.மு.க_விற்கு அளிக்கப்பட்டன. என்னென்ன இலாகாக்கள் வேண்டும் என்று வற்புறுத்துவதற்குப் பதிலாக; மீனவர் நலன்களை பாதுகாக்க என்னென்ன செய்யப்பட வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டிருக்கலாமே! ஏன் இதைச் செய்யவில்லை? தங்களுக்குத் தேவையான இலாக்காக்களை வற்புறுத்தி வாங்கி மக்கள் நலனை மறந்துவிட்ட தி.மு.க_வுக்கு வருகின்ற, மக்களவைத் தேர்தலில் நீங்கள் சம்மட்டி அடி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? (செய்வோம் என பலத்த கரகோஷம்)
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் துன்புறுத்தப்படும் போதும்; சிறைபிடிக்கப்படும் போதும்; ஆட்சியில் இருந்து கொண்டு அலட்சியமாக இருந்த
கருணாநிதி; ஆட்சி போன பிறகு மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்பதற்காக இது போன்ற போலி வாக்குறுதிகளை அளிப்பது பித்தலாட்டத்தின் உச்ச கட்டம். பொய்யான வாக்குறுதிகளை வழங்கி இருக்கும் திமுக_விற்கு இந்தத் தேர்தல் மூலம் நீங்கள் நிரந்தர விடை அளிக்க வேண்டும்; அவர்களை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? (செய்வோம் என பலத்த கரகோஷம்)
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

.jpg)
No comments:
Post a Comment