Sunday, March 16, 2014
சென்னை::முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கையால் தமிழக மீனவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனவே, கொழும்பு பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள தமிழகம் இசைவு தெரிவித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
தமிழக மீனவர்கள், குறிப்பாக புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகை மாவட்ட மீனவர்கள், பாக் நீரிணை பகுதியில் மீன்பிடிப்பதில் மிகுந்த துன்பத்துக்கு ஆளாகி வருகின்றனர். அவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருக்கும்போது, திடீரென்று இலங்கை கடற்படையினர் வந்து, அவர்களை கைது செய்வதும், படகுகளை இழுத்துச் செல்வதும், அவர்கள் பிடித்திருந்த மீன்களை அள்ளிச்செல்வதும் தொடர்கதையாகிவிட்டது.இந்த அவல நிலைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவிடம் மீனவர்களின் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. இருநாட்டு மீனவர்களும் பேசிக்கொண்டால், இந்தப் பிரச்சினையில் ஒரு தீர்வு எட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்தார்.
உடனே அதுபற்றி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அவர் 20.9.13 அன்று கடிதம் எழுதினார். இதற்கு உரிய அனுமதியை அளிப்பதற்கு, சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்றும் சென்னையில் பேச்சு வார்த்தையை வைத்துக் கொள்ளலாம் என்றும் அதில் கூறியிருந்தார்.மேலும், இலங்கை மீனவர்கள் சார்பில் கூட்டத்தில் கலந்துகொள்பவர்களின் பட்டியலை அனுப்பி வைக்கும்படி அவர்களை கேட்டுக்கொள்ள வேண்டும் என்றும் பிரதமரை முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதாவின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, இரு நாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தையை ஜனவரி 27_ந் தேதி சென்னையில் வைத்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தைக்கு முன்பு, இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை விடுவிக்கவேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா உறுதிபடத் தெரிவித்துவிட்டார்.அதன் பின்னரே தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொண்டது. அதே நேரத்தில், தமிழக சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கவேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டது.
அதன்படி, தமிழக சிறையிலுள்ள 179 இலங்கை மீனவர்கள் படிப்படியாக விடுதலை செய்யப்பட்டனர். இலங்கையில் இருந்து 250_க்கும் மேற்பட்ட தமிழக மற்றும் காரைக்கால் மீனவர்கள் படிப்படியாக அங்கிருந்து விடுவிக்கப்பட்டனர். இவர்களை இந்திய கடலோர காவற்படை அழைத்து வந்தது.இரு தரப்பிலும் கைதான அனைத்து மீனவர்களும் பரஸ்பரம் விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 27_ந் தேதி சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மீன்வளத்துறை அலுவலக அரங்கில் இருநாட்டு மீனவர் பிரதிநிதிகள் இடையே பேச்சு வார்த்தை நடந்தது.
இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை 13_ந் தேதி கொழும்பில் நடத்துவதென்று முடிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த இடைவெளி காலத்திலும் தமிழக மீனவர்கள் பலரை இலங்கைக் கடற்படை தொடர்ந்து கைது செய்த வண்ணம் இருந்தது. அப்போதெல்லாம், அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதத்துக்கு மேல் கடிதம் எழுதியபடி இருந்தார்.இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நெருங்கியபோது, ஏற்கனவே கூறியபடி தமிழக மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசுத் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால் முழுமையாக அல்லாமல், கைதான தமிழக மீனவர்களில் ஒரு பகுதியினரை மட்டும் இலங்கை அரசு விடுவித்தது.
எனவே 13_ந் தேதி நடக்க இருந்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை தமிழகம் புறக்கணித்தது. எனவே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை 25_ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.அனைத்து மீனவர்களும் விடுவிக்கப்பட்டாக வேண்டும் என்பதில் முதல்_அமைச்சர் ஜெயலலிதா உறுதி காட்டியதால், மீதமுள்ள மீனவர்களும் இலங்கை கோர்ட்டினால் விடுவிக்கப்பட்டனர். அவர்களின் படகுகளும் விடுவிக்கப்பட்டன.
இது முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிகப்பெரிய வெற்றியாக அமைந்துவிட்டது. அவரது இடைவிடாத முயற்சியால் 177 மீனவர்கள் விடுவிக்கப்பட்டதோடு, அவர்களின் 44 படகுகளும் கிடைத்துவிட்டன. இதை நன்றிப் பெருக்கோடு குறிப்பிட்டு, முதல்வர் ஜெயலலிதாவை அந்த மீனவர்களின் குடும்பங்கள் வாழ்த்தினர்.அனைத்து தமிழக மீனவர்களும் விடுதலை அடைந்ததைத் தொடர்ந்து, 25_ந் தேதி நடக்கவுள்ள இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதற்கு தமிழக அரசு இசைவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசின் வெளியுறவுத் துறை இணைச்செயலாளர் சுசித்ரா துரைக்கு தமிழக மீன்வளத்துறை செயலாளர் எஸ்.விஜயகுமார் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:_தமிழக மற்றும் இலங்கை மீனவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதை முன்மொழிந்து பிரதமருக்கு 20.9.13 அன்று தமிழக முதல்வர் கடிதம் எழுதியதை சுட்டிக்காட்டி கடந்த 2_ந் தேதி உங்களுக்கு நான் எழுதிய கடிதத்தை நினைப்பூட்டுகிறேன்.முதல்_அமைச்சர் கடிதம் எழுதிய பிறகு சென்னையில் ஜனவரி 27_ந் தேதி இருநாட்டு மீனவர் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் மார்ச் 13_ந் தேதியன்று கொழும்பில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று குறிப்பிட்டு உங்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன்.
மேலும், இலங்கையில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுவித்தால்தான், அந்த பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்பதையும் அதில் குறிப்பிட்டு இருந்தேன். பின்னர், தமிழக மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுவிப்பது தொடர்பான எந்த தகவலையும் தமிழக அரசு இதுவரை பெறவில்லை என்று 11_ந் தேதி குறிப்பிட்டேன்.
பேச்சுவார்த்தை நடக்க வேண்டும் என்றால், கைதாகியுள்ள அனைத்து தமிழக மீனவர்களும், அவர்களின் படகுகளும் அதற்கு முன்பு விடுவிக்கப்பட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தப்பட்டது.
தமிழக முதல்வரின் தொடர் முயற்சிகளுக்குப் பிறகு 12_ந் தேதி பிற்பகலில் 116 தமிழக மீனவர்களையும், அவர்களின் 26 படகுகளையும் இலங்கை அதிகாரிகள் விடுவித்தனர். மீதம் 61 மீனவர்களும், 18 படகுகளும் விடுவிக்கப்படாமல் இருந்ததால், திட்டமிட்டபடி 13_ந் தேதி பேச்சுவார்த்தையை நடத்த முடியாமல் போய்விட்டது.முதல்கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களும் அவர்களின் படகுகளும், இலங்கை கோர்ட்டால் விடுவிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசும், இங்கு ஜெயிலில் அடைத்து வைத்திருந்த 39 இலங்கை மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவித்துவிட்டது.
இருநாட்டு மீனவர் பிரதிநிதிகள் இடையே 25_ந் தேதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இலங்கை அரசு தயாராக இருக்கிறதென்று அங்குள்ள இந்திய தூதரகம் தெரிவித்ததாக, 13_ந் தேதி எழுதிய கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டு இருந்தீர்கள். மாற்றப்பட்டுள்ளபடி 25_ந் தேதி பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று இலங்கை அரசுக்கு நீங்கள் தகவல் அளியுங்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment