Sunday, March 16, 2014
இலங்கை::யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வடக்கின் போர் மற்றும் பொன் அணிகளின் போர் ஆகிய இரண்டு கிரிக்கெட் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டள்ளதாக போட்டியின் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும், சென் ஜான்ஸ் கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டி, மத்திய கல்லூரியின் மைதானத்தில் நடைபெற்று வந்தது. இந்தப் போட்டியின் போது நடுவர் வழங்கிய ஆட்டமிழப்பில் ஏற்றபட்ட சர்ச்சையைத் தொடர்ந்து, இரண்டு போட்டியின் நடுவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இரண்டு தரப்பினர்களுக்கிடையேயும் கருத்து மோதல் ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து தொடர்ந்தும் போட்டியை நடத்துவதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக போட்டி இடையில் நிறுத்தப்பட்டது. ஆயினும், தொடர்ந்து போட்டி நடத்துவது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களும் பலனளிக்காத நிலையில், போட்டி ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்து.
இதேபோன்று பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் யாழ். சென் பேட்ரிக்ஸ் கல்லூரிக்கும், வட்டுக் கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையில் வட்டுக் கோட்டை மைதானத்தில் நடைபெற்று வந்தது.
இந்தப் போட்டியின் போது இரண்டு பாடசாலைகளின் பழைய மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து மோதல் கைகலப்பாக மாறியதில் ஏற்பட்ட மோதலில் பழைய மாணவர் ஒருவர் உயிரிழந்ததால், போட்டியில் பெரும் களேபரம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால், போட்டியை ஒத்திவைப்பதாக போட்டியின் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். இவ்வாறு யாழில் இடம்பெற்ற பாடசாலைகளுக்கிடையிலான இரண்டு போட்டிகளிலும் ஏற்பட்ட மோதல்களினால், இரண்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது..
பொன் அணிகளின் போர்: கைகலப்பில் ஒருவர் பலி!
பொன் அணிகளின் போர் என்ற பெயரில் யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் புனித பத்திரிசியார் (சென். பேட்ரிக்ஸ்) கல்லூரிக்கும், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணிக்கும் இடையிலான 26வது ராஜன் கதிர்காமர் வெற்றிக்கிண்ண ஒருநாள் துடுப்பாட்டப் போட்டி சனிக்கிழமை (15) வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் பிக்நெல் மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
இதன்போது, பார்வையாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. இதன்போது, அங்கு காணப்பட்ட வெற்று வெரல் ஒன்றினால் தாக்கப்பட்ட நிலையில் புனித பத்திரிசியார் கல்லூரியின் பழைய மாணவர் கமலன் என்பவர் உயிரிழந்திருக்கின்றார். குறித்த நபரின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment