Sunday, March 16, 2014
இலங்கை::சர்வதேசம், சர்வதேசம் எனக் கூறி உலக நாடுகளின் பின்னால் சுற்றித் திரிந்து தமது
சொந்த நாட்டிற்கு எதிராகவே விசாரணை நடத்தி சட்டநட வடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
விடுத்து வந்த தமிழ் அரசியல் தரப்பினருக்கு அச்சர்வதேசம் ஜெனீவாவில் நல்லதொரு
பாடத்தைப் புகட் டியுள்ளது. உள்நாட்டு புலிபயங்கரவாத அழிப்பு யுத்தத்தில் எமது
படைவீரர்கள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் கூறிய தமிழ்த் தரப்பு உள்நாட்டில்
அதனைத் தீர்க்க முயலாது சர்வதேசத்திடம் நியாயம் கேட்டுப் புறப்பட்டு இன்று இரண்டும்
கெட்டான் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
உலகில் பயங்கரவாதத்தை அழிப்பதில் முன்னிலை வகிக்கும் அமெரிக்கா இவர்களது ஒரு பக்கக்
கதைகளை மட்டுமே கேட்டு ஒரு ஜனநாயக நாட்டின் மீது நடவடிக்கை எடுக்கும் என இவர்கள்
நம்பியிருந்தமை இவர்களது அறி யாமையைக் காட்டியுள்ளது. உள்நாட்டில் உங்களது
பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளுங்கள் என சர்வதேசம் இன்று கூறியுள்ளமை இது
முதற்தடவை அல்ல. இதற்கு முன்னரும் பல தடவைகள் இக்கோரிக்கை அமெரிக்கா உட்படப் பல
நாடுகளால் முன்வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அமெரிக்கா போர்க் குற்ற விசாரணையை
சர்வதேச மட்டத்தில் நடத்த பிரேரணை கொண்டுவரும், அதற்கு உலக நாடுகள் ஆதரவு
தெரிவிக்கும் என்பதாக தமிழ்த் தரப்பு நம்பியிருந்து ஏமாந்துள்ளது. பயங்கரவாதிகளை
அழிக்குமாறு உலக நாடுகளுக்குக் கூறி வருவதுடன் நேரடியாகவே ஒத்துழைப்பும் வழங்கிவரும்
அமெரிக்கா போன்ற ஐரோப்பிய நாடுகள் அப்பயங்கர வாதிகளை அழித்தமையை குற்றம் என விசாரணை
நடத்த முன்வருமா என்பதை தமிழ் அரசியல் தரப்பினர் எப்போதோ புரிந்து கொண்டிருக்க
வேண்டும்.
உள்நாடு ஒன்றில் சிறுபான்மையாக வாழும் ஓர் இனம் தாம் பெரும் பான்மையாக வாழும்
இனத்தால் பாதிக்கப்படுவதாகத் தொடர்ச்சியாகக் கூறி வருவதை அமெரிக்கா கருத்திற் கொண்டு
சில நகர்த்தல்களை மேற் கொண்டதே தவிர ஆரம்பம் முதலே இலங்கை அரசாங்கத்தின் மீது எவ்வி
தமான அழுத்தத்தையும் அது கொடுக்கவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அத்துடன்
இலங்கை அரசாங்கம் போருக்குப் பின்னர் யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களில் பாரிய
அபிவிருத்திகளை மேற்கொண்டு வருவ துடன் உள்நாட்டிலேயே இனப்பிரச்சினையைத் தீர்ப்பதில்
எடுத்து வரும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் அமெரிக்கா உட்பட பல உலக நாடுக ளும்
அவதானித்ததன் விளைவாகவே சர்வதேச விசாரணைக் கோரிக்கை தோல்வி கண்டது.
அமெரிக்காவும், இலங்கை வரும் ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்களும், இராஜதந்திரிகளும்
தம்மால் முன்வைக்கப்படும் பாதிப்புக்கள், இழப்புக்கள் தொடர்பான ஆவணங்களை மட்டுமே
சேகரித்துச் செல்வதாக தமிழ்த் தரப்பு இதுவரை காலமும் நம்பியிருந்துள்ளது. ஐக்கிய
நாடுகள் சபை பிரதிநிதிகளும் சரி, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளின்
பிரதிநிதிகளும் சரி இலங்கை வந்து செல்லும்போது இருதரப்பினரும் முன்வைக்கும்
கருத்துக்களை முறையாக உள்வாங்கியே நாடு திரும்புகின்றனர். அவர்கள் அனைவருமே தமது
இராஜதந்திர பணிகளைப் பக்கச்சார்பின்றிச் செய்துள்ளனர்.
இந்த உண்மை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள (புலிகள் ஆதரவு தறுதலைகளுக்கு) கற்றறிந்த தலைவர் களுக்கு நன்கு
தெரியும். ஆனால் அவர்கள் உள்ளூர் அரசியலுக்காக அவற்றை வெளிக்காட்டவில்லை. அண்மையில்
ஜெனீவாவில் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி எழிலனை வாயை மூடிவைக்குமாறு பாராளுமன்ற
உறுப்பினர் சுமந்திரன் அவருக்கு உத்தரவிட்டமை இதற்கு சான்றாக அமைகிறது. அதேபோன்று
இவ்விடயம் நன்கு தெரிந்தமையினால்தான் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தான் அரசியல்
கதைப்பதில்லை எனக் கூறி வருவதுடன் ஜெனீவா விஜயத்தையும் தவிர்த்துக் கொண்டார்.
உண்மையில் தமிழ்க் கூட்டமைப்பிலுள்ள உலக அரசியல் தெரியாத சிலரும், சுயலாப அரசியல்
செய்து வரும் மனோ கணேசன் போன்ற சிலரும், விடயம் தெரிந்திருந்தும்
பிரசாரத்திற்காகவும், சூடான செய்திகளை வெளியிடுவதற் காகவும் சில தமிழ் ஊடகங்களுமே
சர்வதேச விசாரணைக் கோரிக்கை எனும் மாயையை தமிழ் மக்கள் மனங்களில் விதைத்தன. இதற்கு
புலத்தில் தொடர்ந் தும் சொகுசு வாழ்க்கை வாழ விரும்பும் தமிழர் பலரும் ஒத்துழைப்பு
நல்கி வந்தனர்.
இன்று அனைத்துமே புஸ்வாணமாகியுள்ள நிலையில் விசாரணை நடத்துவதாயின் உள்நாட்டிலேயே
நடத்தி தீர்வு காண முன்வருமாறு சர்வ தேசம் கையை விரித்துள்ளது. இதனை அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தா உட்படப் பல தமிழ் அரசியல்வாதிகளும் முன்னரேயே கேட்டிருந்தனர். ஜனா திபதி
அவர்கள் எத்தனை தடவைகள் பேச்சுவார்த்தை நடத்த வருமாறும், பாராளுமன்றத் தெரிவுக்
குழுவில் இணைந்து கருத்துக்களை முன்வைக்கு மாறும் கோரிக்கை விடுத்தார். சர்வதேசம்
தமக்கு எல்லாம் தரும் என நம்பி அவை அனைத்தையும் தட்டிக் கழித்த தமிழ் அரசியல்
தரப்பின் நிலை இன்று கவலைக்கிடமாகியுள்ளது. அரசாங்கத்துடன் பேசியே தீர்வினைக் காண
வேண்டிய கட்டாய நிலை இன்று ஏற்பட்டுள்ளது.
எனவே தமிழ் அரசியல் தரப்பு இனியாவது வீறாப்பு பேசுவதையும், தாய் நாட்டைக் காட்டிக்
கொடுப்பதையும் கைவிட்டுவிட்டு பேச்சுவார்த்தை மூலமாக தீர்வொன்றினைக் காண முன்வர
வேண்டும். அதற்கு தமிழ்க் கூட்டமைப் பிலுள்ள தலைவர் சம்பந்தன், சுமந்திரன் போன்றோர்
மக்களுக்கு உண்மை நிலையை விளக்க வேண்டும். கிணற்றுத் தவளைகளாக இருந்து கொண்டு உலக
அரசியல் நிலை தெரியாது அறிக்கை அரசியல் நடத்தும் தமிழ் அரசியல்வாதிகளை தமிழ்
ஊடகங்கள் ஓரங்கட்ட வேண்டும். தமிbழம், தமிழ்த் தேசியம் எனப் புறப்பட்ட தமிழ்ச்
சமூகம் இன்று சர்வதேசத்தினால் நம்பிக் கெட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதை தமிழ்
மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் இனியாவது உணர்ந்து கொள்ள வேண்டும். இல்லையேல்
மிச்சமாக இருப்பதையும் இழந்துவிடும் நிலைக்கு தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பிலுள்ள
சிலர் தமிழினத்தைத் தள்ளிச் சென்றுவிடுவர் என்பதே உண்மை. இலங்கை வந்து சென்ற
வெளிநாட்டுத் தூதுவர்களிடமும், ஐ.நா பிரதிநிதி களிடமும் ஆயர்களும், தமிழ்
அரசியல்வாதிகளும் தெரிவித்த கருத்துக்க ளுக்கு வர்ணப் புகைப்படங்களுடன் தலைப்புச்
செய்திகளைப் போட்ட தமிழ் ஊடகங்கள் இனியாவது சர்வதேசத்தின் உண்மை நிலைப்பாட்டை தமிழ்
மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.
அரசாங்கத்தை தமிழ் மக்களின் விரோதியாகச் சித்தரிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
உள்ளூரிலேயே விசாரணையோ, தீர்வோ காண ஆக்கபூர் வமான கருத்துக்களை பாராளுமன்ற
உறுப்பினர் சுமந்திரன் போன்றவர்களிடம் கேட்டு வாங்கிப் பிரசுரிக்க வேண்டும்.
தமிழருக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டுமெனத் திறந்த மனதுடன் இருக்கும் ஜனாதிபதி
அவர்கள் மூலமாக விரைவானதொரு தீர்வை உள்நாட்டிலேயே காண அனைத்துத் தரப்பினரையும்
ஊக்குவிக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையும் எதிர்பார்ப்புமாகும்.



No comments:
Post a Comment