விக்கினேஸ்வரனும் மனோ கணேசனும் முன்வைக்கும்
குற்றச்சாட்டுக்கள் மீண்டும் நாட்டுக்குள் தமிழ் அடிப்படைவாதத்தை
ஊக்குவிப்பதாக உள்ளது என தெரிவித்த ஜாதிகஹெல உறுமயவின் தேசிய
அமைப்பாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க இவர்கள் இருவரும் சர்வதேச
சதிகாரர்களுக்கு நாட்டை காட்டிக் கொடுப்பதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க மேலும் தெரிவிக்கையில்
கடந்த 8 ஆம் திகதி சர்வதேச மகளிர் தின நிகழ்வு வடக்கில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் வடக்கில் தமிழ் பெண்கள் இராணுவத்
தால் கடத்தப்படுவதாகவும் பாலியல் வன்முறைகளுக்கும் அடக்கு
முறைகளுக்கும் உள்ளாக்கப்படுவதாகவும் தெரிவித்ததோடு
வடக்கிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டுமென்றும்
தெரிவித்திருந்தார். சர்வதேச மகளிர்தினத்தில் விக்கினேஸ்வரன்
இவ்வாறான கருத்தை வெளி யிட்டமைக்கு காரணம் அச்செய்தி
வெளிநாடுகளுக்கு சென்றடைய வேண்டும் என்பதற்காகவே ஆகும்.
அரசாங்கம் சிங்கள மக்களின் வரிப்பணத்தில் அமைத்துக் கொடுத்த
வீதியில் வாகனத்தில் சொகுசாக பயணம் செய்யும் கொழும்பில் சொகுசு வாழ்க்கை
அனுபவிக்கும் விக்கினேஸ்வரன் வாரத்துக்கு ஒரு தடவை வடபகுதிக்கு
சென்று இவ்வாறான கருத்துக்களை வெளியிடுகின்றார். எந்தவிதமான
சாட்சியங்களோ அடிப்படையோ இல்லாமல் பொய்கூறுகிறார்.
அதேபோன்று கொழும்பில் மனோகணேசனும் வடக்கில் ஆண்பிள்ளைகளை பறி
கொடுத்த தாய்மார் இன்று தமது பெண்பிள்ளைகளை பாதுகாத்து தருமாறு
படையினரிடம் மன்றாடுவதாக கூறுகிறார்.
இதன் மூலம் விக்கினேஸ்வரனும் மனோ வும் மீண்டும் நாட்டுக்குள்
தமிழ் அடிப்படைவாதத்தை ஊக்குவிக்கின்றனர். அத்தோடு தாய்
நாட்டுக்கு எதிரான சர்வதேச அதிகாரங்களுக்கு துணை போகின்றனர்.
எனவே, நாட்டுக்குள் மீண்டும் பழைய நிலைமையை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம்.
அப்படி முயற்சித்தால் நாமும் விடுதலைப் புலிகளின் சிங்கள
மக்களுக்கு எதிரான மிலேச்சத்தனமான நடவடிக்கையை வெளியிட வேண்டி
நேரிடும் என்றும் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார்.
No comments:
Post a Comment