Tuesday, March 18, 2014
இலங்கை::இலங்கைக்கு எதிராக விசாரணை நடாத்த சட்ட ரீதியாக சாத்தியங்கள் கிடையாது என
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இலங்கை மனித உரிமை
விவகாரம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர்
நவனீதம்பிள்ளையினால் விசாரணை செய்ய முடியாது என அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச விசாரணை நடாத்துவதற்கான சட்ட ரீதியான அதிகாரம் நவனீதம்பிள்ளைக்கு கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை குறித்து விசாரணை நடாத்த நவனீதம்பிள்ளைக்கு சட்ட ரீதியாகவோ அல்லது நிதி ரீதியாகவோ சந்தர்ப்பம் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மஹாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நவனீதம்பிள்ளை திறந்த மனதுடன் விசாரணைகளை நடாத்த முன்வரவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கம் தமிழ் மக்களை பயங்கரவாத பிடியிலிருந்து மீட்டுள்ளதாகவும், யுத்தம் நிறைவடைந்து ஒரு வார காலத்திலேயே சர்வதேச சுயாதீன விசாரணைகளை நடாத்த வேண்டுமென நவனீதம்பிள்ளை கோரியதாகத் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம அவரது பக்கச்சார்பு தன்மை வெளிப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சில பலம்பொருந்திய தரப்பினர் இலங்கையில் இரண்டு அரசாங்கங்கள் இருப்பதனைப் போன்று சிலர் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். ஒன்று இலங்கையிலும் மற்றுமொன்று ஜெனீவாவிலும் இருப்பது போன்று இந்த சில தரப்பினர் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். பலம்பொருந்திய நாடுகளின் அழுத்தம் காரணமாக சில நாடுகள் இலங்கைக்கு எதிராக வாக்களிக்க ஆயத்தமாகி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment