Tuesday, March 18, 2014
இலங்கை::யாழ். சென்பற்றிக்ஸ் கல்லூரியின் பழைய மாணவன் ஜெயரட்ணம் டினோசன் அமலனின் உடல் இன்று பிற்பகல் பொலிஸ் பாதுகாப்புடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் 3 மணியவில் அமலனின் உடல் மார்ட்டின் வீதியில் உள்ள அவரது இல்லத்திலிருந்து எடுத்து வரப்பட்டு சென்.பற்றிக்ஸ் கல்லூரியில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு அஞ்சலி நிகழ்வும் நடைபெற்றது.
அதனையடுத்து அவரது உடல் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அமலனின் இறுதி நிகழ்வில் உறவினர்கள் , பாடசாலையின் பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினர் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.



No comments:
Post a Comment