Thursday, March 6, 2014

சவூதி முதலீட்டுக் கம்பனி முக்கியஸ்தர்கள் அ’சேனை விஜயம்!

Thursday, March 06, 2014
இலங்கை::கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபிஸ் நசீரின் அழைப்பின் பேரில் சவூதி அரேபியாவின் பிரபல முதலீட்டுக் கம்பனியின் முக்கியஸ்தர்கள் அடங்கி தூதுக் குழுவினர் கிழக்கு மாகாணத்திலுள்ள பல முக்கிய இடங்களை பார்வையிட்டனர்.

அப்துல் றஊப் அல் – இஸாயி தலைமையில் வருகை தந்த குழுவினர் நேற்று (2014.03.04) அம்பாறை மாவட்ட அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு வருகை தந்து அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடினர்.

கிழக்குமாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு மாகாண அமைச்சர் ஹாபிஸ் நசீர், அட்டாளைச்சேனை உதவித் தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா, பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எல்.முனாஸ், ஏ.எஸ்.எம்.உவைஸ், ஐ.எல்.அப்துல் முனாப், எம்.ஐ.பாரீன், என்.எல்.யாசீர் ஐமன், றியாஸ் மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

இக் கலந்துரையாடல் முடிவுற்றதன் பின்னர் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட தென்கிழக்கு அறபிக் கல்லூரி, ஒலுவில் துறைமுகம் போன்ற முக்கிய இடங்களை பார்வையிட்டு இவ்விடயம் தொடர்பில் பல்வேறு துறைகளுக்கான முதலீட்டு நடவடிக்கைகளுக்குரிய ஆலோசனைகளும் இதன்போது பெறப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment