Thursday, March 06, 2014
இலங்கை::உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் 142 மில்லியன் ரூபா செலவில்
கொள்வனவு செய்யப்பட்ட கழிவுநீர் அகற்றுவதற்கு தேவையான களிபௌசர்கள் 40
உள்ளுராட்சி சபைகளுக்கு தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளுராட்சிம் மாகாண
சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களினால்
பகிர்ந்தளிக்கப்பட்டது.
இந்நிகழ்வு உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு வளாகத்தில் புதன்கிழமை காலை இடம்பெற்றது.
40 உள்ளுராட்சி சபைகள் இக்களி பௌசர்களை பெற்றுக் கொண்டதன் மூலம் அவர்கள் மிக நீண்ட காலமாக எதிர்நோக்கிய கழிவு நீர் அகற்றும் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிட்டியுள்ளதாகவும் அதனை அவர்களுக்காக வழங்கியஅமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும்,நிகழ்வில் கலந்து கொண்ட உள்ளுராட்சி சபைகளின் தலைவர்கள் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா;
நமது நாட்டை ஆட்சி செய்த எந்த ஆட்சியாளர்களின் காலத்திலும் உள்ளுராட்சி சபைகள் இன்று அபிவிருத்தி செய்யப்படுவதனைப் போன்று என்றுமே அபிவிருத்தி செய்யப்படவில்லை.
குறிப்பாக நமது ஜனாதிபதி அவர்களின் தலைமைக் காலம் உள்ளுராட்சித் துறைக்கு பொற்காலம் எனக் கருத முடியும். அவரின் வழிகாட்டலின் கீழ் நாட்டில் காணப்படும் உள்ளுராட்சி சபைகளை எமது அமைச்சு அபிவிருத்தி செய்து வருகின்றது.
இன்று 40 உள்ளுராட்சி சபைகள் களி பௌசர்களைப் பெற்றிருக்கின்றீர்கள். அதனைக் கொண்டு மக்களுக்கு சிறந்த சேவையாற்ற வேண்டும். உள்ளுராட்சி சபைகள் மக்களின் பிரச்சினைகளை கண்டறிந்து தீர்வு வழங்கும் நிறுவனமாகவே இருக்க வேண்டும்.
உள்ளுராட்சி சபைகளின் மக்கள் பிரதிநிதிகள் ஆகிய நீங்கள் என்றும் மக்களுடன் இரண்டறக் கலந்திருக்க வேண்டும். குறிப்பாக இனிவரும் காலங்களில் நீங்கள் அங்குமிங்கும் வாக்குப் பெற முடியாது. உங்களுக்கென்று ஒரு வட்டாரம் நிர்ணயிக்கப்படும் அதனுள்தான் நீங்கள் வாக்கினைப் பெற வேண்டும்.
ஆகவே நாம் உங்களுக்கு வழங்கும் இயந்திரங்களை,கட்டிடங்களைக் கொண்டு மக்கள் மனதை வென்று அவர்களுக்கு சேவையாற்றி அவர்களின் மனதைவெல்வதன் மூலமே வட்டார தேர்தல் முறைக்கு முகம் கொடுக்க முடியும்” என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் இந்திக பண்டாரநாயக்க, அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.ஏ.கே. ரணவக்க, உள்ளுராட்சி சபைகளின் தலைவர்கள்,அமைச்சின் உயர் அதிகாரிகளும் ஊழியர்களும் கலந்து சிறப்பித்தனர்.

No comments:
Post a Comment