Thursday, March 6, 2014

வடமராட்சியில் அரச ஆதரவு கட்சிகளது உறுப்பினர்களிற்கு கொலை அச்சுறுத்தல்கள்? விசாரணைகள் ஆரம்பம்!

Thursday, March 06, 2014
இலங்கை::வடமராட்சிப்பகுதியில் அரச ஆதரவு கட்சிகளது உறுப்பினர்களிற்கு விடுக்கப்பட்டதாக கூறப்படும் கொலை அச்சுறுத்தல்கள் தொடர்பில் இராணுவமும் பொலிஸும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளன.

கடந்த சில நாட்களாக குறித்த தரப்புக்களினது வீடுகளிற்கு சென்றுள்ள அடையாளம் காணப்பட்டிருக்காத இளைஞர்கள் சிலர் எச்சரிக்கை கடிதங்களை விநியோகித்தமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்களின் வீடுகளிற்கு இரவு நேரத்தினுள் அவை வீசப்பட்டோ அல்லது சுவரொட்டிகளாக ஒட்டப்பட்டோ உள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் குறித்த எச்சரிக்கைகள் தொடர்பில் முழு அளவிலான விசாரணைகளினை பாதுகாப்பு தரப்பு ஆரம்பித்துள்ளது. அத்தகைய கொலை அச்சுறுத்தலிற்குள்ளான ஈபிடிபி சார்பு வல்வெட்டித்துறை நகரசபை பெண் உறுப்பினர் இன்று விசாரணைகளிற்கு உட்படுத்தப்பட்டதுடன் அவரது வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டதாக தெரியவருகின்றது.

No comments:

Post a Comment