Thursday, March 06, 2014
இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானத்திற்கு ஆதரவளிக்குமாறு தமிழ்த்
தேசியக் (புலி)கூட்டமைப்பு, அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் கோரிக்கை
விடுத்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்
சுமந்திரன், அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜுலி பிஷொப்பை
சந்தித்துள்ளார்.
ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதற்கு ஆதரவளிக்குமாறு சுமந்திரன், பிஷொப்பிடம் கோரியுள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கும் பொறிமுறைமையை இலங்கை அரசாங்கம் உரிய விதத்தில் அமுல்படுத்தவில்லை என்பதே பரவலான நிலைப்பாடு என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்தில் சுயாதீன விசாரணை பற்றி குறிப்பிடப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க உள்ளிட்ட நாடுகளின் தற்போதைய தீர்மானம் சற்று ஏமாற்றமளிக்கும் வகையில் அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். தீர்மானத்தில் திருத்தங்கள் செய்யப்படும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் இலங்கை தொடர்பான தீர்மானத்தை அமுல்படுத்தி உரிய ஆதரவினை பெற்றுக்கொள்ளும் என நம்பிக்கை கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். குறித்த தீர்மானத்திற்கு அவுஸ்திரேலியாவின் ஒத்துழைப்பு அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவுஸ்திரேலிய அரசாங்கம் படகுப் பயணிகள் தொடர்பான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதனை எம்மால் புரிந்துகொள்ள முடியும், எனினும் மனித உரிமைப் பிரச்சினைகளை அதனுடன் இணைத்துப்பார்க்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். தீர்மானத்திற்கு ஆதரவளிக்குமாறு அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சரை சந்தித்து கோரியதாகத் தெரிவித்துள்ளார். கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என பிஷொப் உறுதியளித்ததாக சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment