Tuesday, March 4, 2014

அமைச்சர் ஜீ எல் பீரிஸ் உள்ளிட்ட இலங்கை குழுவினர் நேற்று ஜெனிவா நகரை சென்றடைந்தனர்!

Tuesday, March 04, 2014
இலங்கை::இந்த முறை ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் பங்குகொள்ளும் வெளிவிவகார அமைச்சர் ஜீ எல் பீரிஸ் உள்ளிட்ட இலங்கை குழுவினர் நேற்று ஜெனிவா நகரை சென்றடைந்தனர்.

இந்த குழுவினார் நாளைய தினம் ஜெனிவா மனித உரிமைகள் அமர்வில் பங்குகொள்கின்றனர்.

ஜெனிவா மனித உரிமைகள் மாநாடு ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான்கி மூன் மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதன் பிள்ளை ஆகியோர் தலைமையில் நேற்று ஆரம்பமானது.

இதனிடையே, ஜீ எல் பீரிஸ் எதிர்வரும் வியாழக்கிழமை நவனீதன் பிள்ளையை சந்திக்க உள்ளார்.

இந்த நிலையில், இலங்கை தொடர்பான நவனீதன் பிள்ளையில் அறிக்கை எதிர்வரும் 26ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment